அத்தியாயம் 3: ஆரம்பம்- பகுதி 1
கேட்டி தனது பெற்றோரின் கல்லறைக்கு முன்னால் அமர்ந்திருந்தாள், பாதிரியார் அனைத்து ஆத்மாக்களும் சாந்தியடையப் பிரார்த்தனை செய்தார். வலேரியாவின் மன்னரின் உத்தரவின் பேரில், உடல்கள் அனைத்தும் வலேரியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, காலை பொது மயானத்தில் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இறந்த உடல்களின் பெயர்களைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்ட வெள்ளை சூனியக்காரர் மாறு வேடமிட்டு பிரதான பாதிரியாராய் இருந்தவரின் உதவியைப் பயன்படுத்தி கல்லறைகளில் பெயர்கள் செதுக்கப்பட்டன.
சில்வியா அந்த இளம்பெண்ணின் அருகில் நின்றாள், இனி எங்கே போகப் போகிறது என்று யோசித்தாள். வாம்பைர்களும் மனிதர்களும் இணைந்து வாழ்வது அரிதாக இருந்தது, ஒரு சிலர் மட்டுமே ஒருவருக்கொருவர் மரியாதையும் கருணையும் காட்டினார்கள்.
அவள் வலது பக்கம் பிடிபட்ட அரை-வாம்பைர்களைப் பற்றி, மன்னரும் எலியட்டையும் பேசிக் கொண்டிருந்தனர். பின், அந்த சிறுமியை நோக்கிப் பார்வை திருப்பிய அவளின் கண்கள் மென்மையாகின. அவளை வலேரிய சாம்ராஜ்யத்திற்கு அழைத்து வந்தது சரியான முடிவுதானா? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். மிகக் குறைவான மனிதர்களைக் கொண்ட வாம்பைர்கள் நிறைந்த ஒரு ராஜ்யம் சரியான பாதுகாப்புப் புகலிடமல்ல, ஆனால் வலேரியா இல்லையென்றால், அந்த சிறுமி எங்கே செல்வாள்? அவள் நீண்ட காலமாக அலெக்சாண்டர் பிரபுவை அறிந்தவள், அவள் அவனுடைய நம்பகமான தோழர்களில் ஒருத்தி. அவள் அவனை நன்கு அறிந்திருந்தாள், அதுவே அவளுக்குக் கவலையாக இருந்தது; அலெக்சாண்டர் ஒரே மகனாகப் பேரரசைக் கைப்பற்றினான், மேலும் யாராவது அவனது மோசமான பக்கத்திற்கு வந்தால் ஒருவரை அச்சுறுத்தும் மனிதனாக மாறிவிடுவான். ஒரு வேளை இது அவனை நல்லபடியாக மாற்றிவிடுமோ என்று எண்ணி தலையை ஆட்டினாள். அவனால் சிறுமியைக் கவனித்துக் கொள்ள முடியாவிட்டால், அவளும் எலியட்டும் கவனிப்பை வழங்குவார்கள்.
"வா கேட்டி," என்று அழைத்தாள். சில்வியா கல்லறையில் ஒரு மணி நேரம் செலவழித்த பிறகு , "நீ எப்போது வேண்டுமானாலும் அவர்களைப் பார்க்கலாம்" என்று அந்த சிறுமியிடம் கையை நீட்டினாள்.
கேட்டி வழங்கப்பட்ட கையைப் பிடித்து தரையிலிருந்து எழுந்தாள். அவளது அம்மா அவளை வலுவாக இருக்கச் சொன்னாள், அதனால் அவள் கண்ணீரில் பலவற்றை அடக்கினாள், ஆனால், அவற்றில் சில அவளது கண்களிலிருந்து தப்பின. தற்பொழுது கைகளைப் பிடித்திருந்தவளின் கண்களை அவள் நிமிர்ந்து பார்த்தாள். இவர் ஒரு நல்லவர் போல் தெரிகிறது, கேட்டி தனக்குள் நினைத்துக்கொண்டாள்.
"அடடே... மிகவும் அழகான சிறிய குழந்தை. நான் அதை உடனே சாப்பிட்டுவிடுவேன்", என்று எலியட் அவர்கள் நடந்தபோது சிறுமியைப் பார்த்துக் கூறினான்.
"எலியட், தலை துண்டிக்கப்பட விரும்புகிறாயா?" என்று மன்னர் அருகிலிருந்தபடி கேட்டார். சில்வியாவைக் கேள்வியுடன் பார்த்தபடி எலியட் சரணடைவதாய் கையை உயர்த்தி கீழே குனிந்தான்,
"முயலைப் பாருங்கள், மிகவும் வெண்மையாகவும் அழகாகவும் இருக்கிறது," என்று எலியட் கூறியது கேட்டியை தன் முயலை அவளிடம் நெருங்கச் செய்தது, "மன்னிக்கவும், நான் நகைச்சுவையாகச் சொன்னேன், உன் அழகான பெயர் என்ன?" என்று அவளிடம் கேட்டான்.
"கேத்ரின்," என்று கூறிவிட்டு அவள் சில்வியாவின் அருகில் நின்று அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
"வண்டிகள் வந்துவிட்டன," என்று அலெக்சாண்டர் அவர்களுக்குத் தெரிவித்தார்.
முதல் வண்டியைத் தொடர்ந்து மேலும் இரண்டு வண்டிகள் வந்தன. பழுப்பு நிற வண்டி ஒன்று நின்றது, அதில் வந்தவன் அவர்களுக்கான கதவைத் திறக்க கீழே வந்தான். நால்வரும் அதில் ஏறி நிம்மதியாக அமர்ந்தனர். மன்னரும் எலியட் என்ற மனிதனும் அவர்களுக்கு முன்னால் அமர்ந்திருக்க, கேட்டி அந்தப் பெண்ணின் அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தாள்.
வண்டி கிளம்பியது, பசுமையான மரங்கள் ஒவ்வொன்றும் தங்களை நோக்கி ஓடுவதைப் போல அவள் ஜன்னல் வழியாகப் பார்த்தாள். எலியட்டும் சில்வியாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது, மன்னனின் கண்கள் அவள் மீது படர்ந்ததை உணர்ந்தாள். அவனை நோக்கி ஒரு சிறிய பார்வையைச் செலுத்தினாள், அவனது அடர் சிவப்பு கண்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள், அவள் கண்களை விலக்கி, அவனைத் தவிர வேறு எங்கும் பார்த்தாள். சிறிது நேரம் கழித்து, அவள் மடியைப் பார்த்து, முயலின் ரோமங்களைத் தன் கையால் வருடினாள்.
அலெக்சாண்டர் அந்தப் பெண்ணின் கை விலங்கின் ரோமங்களை மெதுவாகத் துலக்கியதைக் கவனித்தான். ஒரு குழந்தை எவ்வளவு இளமையாக இருந்தாலும், அவன் அல்லது அவளின் தன்மை மற்றும் இயல்பு எப்போதும் படிக்கக்கூடியதாக இருக்கும். ஒரு வாம்பைர் அவளைக் கொல்லும் போது கூட அவள் தன்னை விட விலங்கு பற்றிக் கவலைப்பட்டாள். அவன் பல மனிதர்களைக் கண்டுள்ளான், ஆனால் இவள் அவனது ஆர்வத்தைத் தூண்டியுள்ளாள்.
சில நிமிடங்கள் கடந்து செல்ல, தரையில் ஏதோ விழும் சத்தம் கேட்டது. திடீரென்று ஒரு அம்பின் தலை எலியட் அமர்ந்திருந்த பக்கத்தைத் துளைத்தது, அவர் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கூச்சலிட்டார்.
"ஓ! நம் துணைக்கு ஆட்கள் வந்துள்ளனர்!"
"நம்மைப் பின்தொடர்ந்து அரை-வாம்பைர்கள் உள்ளன, நம் தேரோட்டி இறந்துவிட்டார்" என்று சில்வியா தனது முதுகில் இருந்து பளபளப்பான ஒன்றை வெளியே எடுத்தாள். அவள் முன்பு அணிந்திருந்த கவசத்தை எடுத்து வந்ததை நினைத்து மகிழ்ந்தாள்.
"சில்வியா முன் இருக்கையை எடுத்துக்கொள் மேற்கு நோக்கி ஓட்டு, எலியட் இரு பக்கங்களை எடுத்துக் கொள்," என்று அலெக்சாண்டர் விரைவாக பின்னால் சென்று துப்பாக்கியை எடுத்து, அவர்களில் ஒருவரைச் சுட்டிக்காட்டி உத்தரவிட்டார். அம்புகள் அவர்களை நோக்கிப் பறந்தன, அவர்கள் அதைத் தடுத்தனர், எலியட் அவற்றில் ஒன்றை மயிரளவில் தப்பித்தார்.
"என்ன, அவர்கள் இடைக்காலத்தில் அம்புகளைப் பயன்படுத்துகிறார்களா?" எலியட் துப்பாக்கியின் தூண்டுதலை இழுத்தபடி கேட்டான், "முன்னேறுங்கள்" என்று ஒருவரையொருவர் சுட்டபடி அவர்களிடம் கூறினான்.
"அவை சாதாரண அம்புகள் அல்ல. காற்றை நுகர்ந்து பார். அது துருப்பிடித்தது," என்று அலெக்சாண்டர் இரண்டு அரை-வாம்பைர்களை தலையின் மையத்தில் ஒரே நேரத்தில் சுட்டுக் கொன்றார்.
அவற்றில் ஒன்று தனது கையில் எய்த அம்பை வெளியே எடுத்தான். அம்பை வெளியே எடுத்த பின் அம்பின் தலை ஒரு வம்பைரை முடக்கக்கூடிய விஷத்தால் ஆனது என்பதை உணர்ந்தான். அவர்களுக்குத் துரதிர்ஷ்டவசமாக, இவன் சாதாரண வம்பைர் அல்ல. முழு சாம்ராஜ்யத்திலும் மூன்று வகையான வாம்பைர்கள் இருந்தனர், சாதாரண வாம்பைர்கள், அரை-வாம்பைர்கள் மற்றும் கடைசியாக தூய இரத்த வாம்பைர்கள். சாதாரண வாம்பைர்கள் மற்றும் அரை-வாம்பைர்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களிடமிருந்து இரத்தத்தை உண்கின்றன, அதே நேரத்தில் தூய இரத்தம் கொண்டவர்கள் வாம்பயர்களிடம் இருந்து கூட உணவுண்ண முடியும். இது இவர்களை நிலங்களில் உள்ள முழு படிநிலையிலும் மிக உயர்ந்த உயிரினங்களாக ஆக்குகின்றன. வாம்பைர்களாக மாறிய மனிதர்கள் அரை-வாம்பைர்களாக இருந்தனர். ஆனால், மனித உடலால் புதிய உள் அமைப்புகளைச் சமாளிக்க முடியாதபோது அவற்றின் மாற்றங்கள் பெரும்பாலும் தவறாகின்றன. அரை-வாம்பைர்களின் குழு விஷம் கலந்த அம்புகளை எங்கிருந்து பெற்றிருக்க முடியும் என்றும், அவர்கள் ஏன் இவர்களைத் தாக்குகிறார்கள் என்றும் அவன் ஆச்சரியப்பட்டான். அவர்களில் பலர் இருந்தனர், யாரோ அவற்றைத் திருப்பியிருக்கலாம், என்று அவன் தனக்குள் நினைத்தான்.
அரை-வாம்பைகள் சுடப்பட்டதால், அவைகள் சாம்பல் நிறமாக மாறியது, அவற்றின் உடல் தூசியாகச் சிதைந்து, சிறிது நேரத்தில் மெல்லிய காற்றில் மறைந்துவிடும். ஆனால் அவற்றில் ஒன்று மற்றவற்றை விட வேகமாக இருந்தது, தாக்குதலைத் தவிர்க்கும் விதத்தில் புத்திசாலித்தனமாகவும் தெரிந்தது. அது அனைத்து தோட்டாக்களையும் தவிர்த்தது. எலியட் அவர்களில் ஒருவரைக் கொல்வதில் கவனம் செலுத்தியபோது, அந்த புத்திசாலி வண்டியில் ஏறினான். என்ன நடக்கிறது என்று தெரியாத கேட்டி, துண்டிக்கப்பட்ட பற்களைக் கொண்ட அரை-வாம்பைர் வாயைக் கண்டு கத்தினாள். அது அவள் கையைப் பிடித்துக்கொண்டு நகரும் வண்டியிலிருந்து குதித்தது.
"சில்வியா, வண்டியை நிறுத்து!" சிறுமியை அழைத்துச் சென்ற அரை-வாம்பைரை நோக்கிச் செல்வதற்கு முன் அலெக்சாண்டர் கத்தினார். சில்வியா கடிவாளத்தை இழுத்தபடி வண்டியை நிறுத்தினாள். எலியட் வண்டியில் இருந்து இறங்கி வாம்பைர்களை எட்டி உதைத்துச் சுட்டுக் கொன்றான்.
தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, சில்வியா மற்றொரு துப்பாக்கியைப் பிடித்தாள், தற்போது இரண்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தினாள். உதவிக்கு ஆட்கள் இல்லாமல் தனித்து சில்வியா நிற்பதைக் கண்டு அரை-வாம்பைர்கள் மூன்றும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சிரித்தன.
"கடவுளே, அந்த பார்வையை நான் வெறுக்கிறேன்," அவள் இரண்டு கைகளையும் உயர்த்துவதற்கு முன், "இப்போது யார் சிரிக்கிறார்கள் என்று பார்ப்போம்" என்று அவள் இரண்டு துப்பாக்கி தூண்டுதல்களையும் இழுத்தாள்.