அதைக் கேட்டவன் தன் தலையை பக்கவாட்டில் ஆட்டினான்.
"மாட்டேன்," என்று அவன் சொன்னான். அவன் கண்கள் அவள் மீது பதிந்தன, அவனது மிரட்டும் தோற்றத்தால் அவள் நெளிந்தாள். அதே நேரத்தில், ஒரு பொன்னிற கூந்தலுடைய பெண்மணி லேசான கவச உடையில், சிறிது தலை குனிந்தவாறு அறைக்குள் நுழைந்தாள்.
"ஐயா, சுற்றளவில் இருந்தவர்களை நாங்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துள்ளோம் சூனியக்காரர்கள் உட்படச் சிலரைப் பிடித்தாலும் அவர்களில் இருவர் நாங்கள் அவர்களைப் பிடிப்பதற்கு முன்பே தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பிடிக்க எலியட் ஏற்கனவே கிளம்பிவிட்டார், "என்று அந்தப் பெண் புகாரளித்தாள், அதைக் கேட்ட அந்த நபர் தலையசைத்தான்.
"உயிர் பிழைத்தவர்கள் பற்றி என்ன?" என்று தனக்குக் கீழ் பணிபுரிபவளிடம் கேட்டான். அவள் ஏமாற்றத்துடன் தலையை ஆட்டினாள், "இல்லை ஐயா. அவர்கள் அனைவரின் இரத்தமும் வெளியேற்றப்பட்டுவிட்டன."
"மற்ற பேரரசுகளின் போக்கிரி காரர்கள் இதுதான் செய்வர். அவர்கள் விரும்பியபடி சட்டத்தை மீறுகிறார்கள், எந்த இரக்கமும் இல்லாமல் அப்பாவி ஆண்களையும் பெண்களையும் கொல்கிறார்கள், "என்று அந்த நபர் குளிர்ந்த தொனியில் கூறினான். "ஒரு மன்னன் என்ற முட்டாள் விரைவில் முடிவு செய்திருந்தால், அது தேவையற்ற இரத்தக்களரியையும் வேலையையும் காப்பாற்றியிருக்கும்."
"அரை-வாம்பைர்கள் சபையின் காவலில் எடுக்கப்படவில்லையா?" என்று அந்தப் பெண் அவனிடம் கேட்டாள்.
"சபை வேலையைச் செய்யவில்லை அல்லது யாரோ ஒருவர் மனிதர்களை மாற்ற முயன்று தவறாகி, சிதைந்த அரை-வாம்பைர்களாக மாற்றியுள்ளார். சபை நமக்கு மற்றொரு அறிவிப்பு அனுப்பும் என்று தெரிகிறது. சில்வியா, இந்த இடத்தை சுத்தம் செய்து உடலைப் புதைத்து விடு . எலியட் தனது தற்போதைய வேலையை முடித்தவுடன் என்னைச் சந்திக்கச் சொல்.
"சரி, பிரபுவே," சில்வியா ஒரு தலையசைப்புடன் பதிலளித்தாள், "இது தரையில் கிடப்பதை நான் கண்டேன்," அவள் சுருண்ட நிலையில் இருந்த காகிதத் துண்டுகளை அவனிடம் கொடுத்தாள்.
அவள் அவற்றை அவிழ்ப்பதைப் பார்த்தாள், அது என்னவென்று பார்க்க, "இவை பெயர்கள்" என்று அவன் முணுமுணுப்பதைக் கேட்டாள், அவன் அதைப் படித்த போது அவனது புருவங்களில் ஒன்று உயர்ந்தது, "இதைக் கண்டுபிடித்தபோது யாராவது அருகில் கிடப்பதைக் கண்டாயா?" என்று கேட்டான். இது சாதாரண காகிதத் தோல் அல்ல, அதில் உள்ள செய்தி மிகவும் ரகசியமான தகவல் என்று அவன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.
"மிக அதிகமாக. கிராமவாசிகளின் உடல்கள் அப்பகுதி முழுவதும் சிதறிக்கிடக்கின்றன, "அவள் கண்கள் அந்த இளம் பெண்ணின் பக்கம் திரும்பியது, "அலெக்சாண்டர் அவளை என்ன செய்யப் போகிறாய்?" என்று அவனிடம் கேட்டாள். பாவம், அவள் குடும்பம் அழிந்துவிட்டது, சுற்றிலும் மனிதர்கள் இல்லை என்று நினைத்தாள்.
"எனக்குத் தெரியாது," என்று அவன் பெருமூச்சுடன் பதிலளித்தான்.
அவர்கள் அறையைக் கடந்து சென்றபோது, கேட்டி தனது தாயார் உயிரற்ற நிலையில் தரையில் கிடப்பதைக் கண்டாள். அவளை எழுப்பும் முயற்சியில் அவள் பக்கத்தில் ஓடினாள் ஆனால் அது பயனில்லை. அவளுடைய அம்மா திரும்பி வரப் போவதில்லை. அவள் தோள் குளிர்ந்திருப்பதை உணர்ந்தாள், பின் தன்னைக் காப்பாற்றியவனை நோக்கித் திரும்பினாள்.
"பரவாயில்லை" என்றான் அந்த சிறுமியைப் பார்த்து. அவள் உதடுகளை விட்டு ஒரு அழுகை வெளியேறியது, அவள் அந்த மனிதனின் கைகளில் தன்னைப் புதைத்துக்கொண்டு மெதுவாக அழுதாள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் அவன் கைகளால் அந்தச் சிறுமியைச் சுற்றிக் கொண்டு அவளை தன் கைகளில் வைத்து அழ விட்டான்.
சில்வியாவிற்க்கு தனது மன்னரின் செயல்களைப் பார்த்து தன் கண்கள் வியப்பில் வெளியே வந்துவிடும் போலிருந்தது. அவள் அவனை அறிந்தே வளர்ந்தவள், வலேரியாவின் பிரபு யாரிடமும் இதுபோன்ற உணர்வுகளையோ சைகைகளையோ காட்டியதில்லை. அலெக்சாண்டர் டெல்க்ரோவ் பிரபு ஒரு இறக்கும் மனிதனுக்குத் தண்ணீர் வழங்குவதைப் பற்றிக் கவலைப்படாத ஒரு மனிதர், அழுவதற்குத் தோள் கொடுப்பதும் இல்லாமல், இங்கே அவர் அவளை அமைதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். மேலும், அது ஒரு மனித இனத்தவள். சமுதாயத்தில் உயர்ந்த தொடர்புகள் இருந்து, அவருக்குப் பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே அவர் மனிதர்களுடன் உரையாடுவார்.
கேட்டிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, அவள் தனிமையாகவும் தொலைந்து போனதாகவும் உணர்ந்தாள். அவள் கண்ணீரை நிறுத்தியதை உணர்ந்தவுடன், அவள் சில அடிகள் பின் நகர்ந்தாள், அவளது பெரிய பழுப்பு நிற கண்களுடன் அந்த மனிதனைப் பார்த்தாள். அவன் பேசுவதற்கு முன் ஏதோ யோசிப்பது போல் இருந்தது. பின் கூறினான்,
"இனிமேல் அவள் என்னுடன் இருப்பாள்," என்று அலெக்சாண்டர் முடிவு செய்தது, சில்வியாவை அவனை நோக்கி தலையை சடார் என்று திரும்பச் செய்தது. வாம்பைர்களின் பிரபு இந்த சிறுமியிடம் ஆர்வம் காட்டினார் என்பதில், அவள் மனதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் இது ஒரு இளம் வயது சிறுமி. "அவளுக்கு வயது வந்தவுடன் நாம் அவளை மனிதர்களின் வீட்டிற்கு அனுப்பலாம்."
"நானும் அதையே நினைக்கிறேன்," சில்வியா பதிலளித்தாள். "நம்மிடம் கோட்டையில் மனிதர்கள் வேலை செய்கிறார்கள், இது ஒரு பிரச்சனையாக இருக்காது." அவர்கள் அவளை மற்ற மனிதர்களுடன் விட்டுவிட்டால், மனிதர்கள் அவளை நன்றாக நடத்துவார்களா என்பது அவர்களுக்குத் தெரியாத ஒன்று, எல்லாவற்றிற்கும் மேலாக, அடிமைத்தனம் இன்னும் பரவலாக இருந்து வருகிறது.
"உன் பெயர் என்ன?" அலெக்சாண்டர் அதிகாரத் தொனியில் தன் துளைக்கும் பார்வையைக் கொண்டு சிறுமியைக் கேட்டான்.
"பாவம் அவள் அலெக்ஸ், இப்படிக் கேட்டுப் பயமுறுத்துகிறாய். சிரி. "என்று சில்வியா அலெக்சாண்டரைக் கூறியது அவனை முறைக்கச் செய்தது. பின், பார்வையை மென்மையாக்கிக் கொண்டு தன் முகத்தில் புன்னகை பூக்க முயன்றான், அது அவனுக்குக் கீழ் பணிபுரிபவளிடமிருந்து ஒரு சிரிப்பை உண்டாக்கியது.
"நீ அதைப் புன்னகை என்று அழைக்கிறாயா?" என்று சில்வியா அவனிடம் கேட்டாள்.
"சரி நீயே இதைக் கையாள்!" வீட்டை விட்டு வெளியேறும் முன் அவளிடம் கூறினான். அந்தப் பெண் சிறுமியை நோக்கிச் சென்று மண்டியிட்டு அமர்ந்தாள்.
"வணக்கம், நான் சில்வியா, அது அலெக்சாண்டர்," அவள் ஒரு மென்மையான புன்னகையுடன் அறிமுகப்படுத்தினாள், "நாங்கள் எந்தத் தீங்கும் செய்யவில்லை, உனக்கு உதவ மட்டுமே விரும்புகிறோம். உன் பெயர் என்ன அன்பே?"
"கேத்ரின்," அந்த பதில் சில்வியாவை புன்னகிக்கச் செய்தது.