webnovel

வேட்டையன்

Iniyan_Siva · Ação
Classificações insuficientes
20 Chs

வெறிச் செயலின் தொடக்கம்

திங்கட்கிழமையன்று தேர்வு முடிவுகள் கல்லூரியில் வெளியிடுவதாக கூறப்பட்டன அதனால் அதிகாலையில் சந்திரன் வேகமாக தன் அப்பாவுடன் மிதிவண்டியில் புறப்பட்டு சென்றார் , சந்திரனின் அப்பா தன் மகனின் மதிப்பெண் என்ன என்று பார்க்க வேகமாக ஓடி வந்தார் தேர்வு முடிவுகள் ஒரு அட்டையில் ஒட்டப்பட்டிருந்தது தந்தை தன் மகனின் பெயரை தேடினார் ஆனால் சந்திரன் பெயர் கடைசி வரை இல்லவே இல்லை அவர் மிகுந்த வேதனையில் துடித்தார் சந்திரனின் உழைப்பு வீணாகி விட்டது என்று வேதனை அடைந்தார். பின் அவர் சந்திரனிடம் நீ தேர்வில் தேர்ச்சி அடையவில்லை என்று கூறினார் அப்போது சந்திரன் நம்பவில்லை நான் நன்றாக தான் எழுதினேன் என்று கூறினார் குடும்பத்தினர் அனைவரும் அந்த பலகையில் பெயர் உள்ளதா என்று பார்த்தார்கள் ஆனால் இல்லை சந்திரன் சோகத்தில் மூழ்கிய படி நின்று கொண்டிருந்தார் அனைவரும் அவனுக்கு ஆறுதல் கூறினார்.

மறுநாள் காலையில் சந்திரனின் தாய் சந்திரனின் அறைக்கு சென்ற போது அவன் அங்கு இல்லை உடனே அனைவரும் அவனை தேடினர் ஆனால் அவன் கிடைக்கவில்லை அதனால் உடனே காவல்துறையிடம் புகார் அளித்தனர் அதன் பின்பும் அவன் கிடைக்கவில்லை. சந்திரன் தன் கனவு பலிக்காமல் போனதால் மன உளைச்சல் காரணமாக வேட்டையாடும் மிருகம் போல மனிதர்களை கொல்ல ஆரம்பித்தான். கொடைக்கானல் காட்டுப்பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்தான் அங்கே வரும் சுற்றுலா பயணிகளை கொடூரமான முறையில் கொன்று குவித்தான் ஆனால் காவல்துறைக்கு சந்திரன் தான் இதை செய்து கொண்டு இருக்கிறார் என்று தெரியாது . சந்திரன் சுமார் 15 கொலைகளை செய்திருக்கிறார் அவன் மிகவும் மன நலம் பாதிக்கப்பட்டு வெறிச் செயலைச் செய்ய தொடங்கினான் . அதன் பின் இரண்டு ஆண்டு காலமாக தொடர் கொலைகளை செய்து வந்திருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு....