webnovel

வேட்டையன்

Iniyan_Siva · Action
Not enough ratings
20 Chs

அறிமுகம் 1

இக்கதையின் முதல் அறிமுகம் ஆதவன். இவர் ஒரு மிகப்பெரிய கேளிக்கை பூங்காவை நடத்தி வந்தார் , அதில் அனைத்து வகையான விளையாட்டுகளும் இருந்தன அதனால் வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் கிடைத்தது அதனால் நன்றாக முன்னேற்றம் அடைந்து நிம்மதியாக வாழ்ந்து வந்தார். இவரின் காதலியின் பெயர் அஞ்சனா. இவர்கள் இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு பிறகு மாதேஷ் என்பவர் ஆதவனுக்கு போட்டியாக மற்றோர் கேளிக்கை பூங்காவை தொடங்கினார். அவன் ஆதவனை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்தான் அதனால் மாதேஷ் ஆதவனின் செயல்களை கவனித்துக் கொண்டே இருந்தார், ஒரு நாள் மாதேஷின் தாய் சாலையில் நடந்து கொண்டிருந்தால் அதி வேகமாக வந்த லாரி அவள் மீது மோதியது அதில் சம்பவ இடத்திலேயே இறந்தால் அதனால் மாதேஷ் வழக்கு தொடர்ந்தார். அந்த லாரியின் உரிமையாளர் ஆதவன் என்று தெரிய வந்தது அதன்பின் ஒரு நாள் இரவில் மாதேஷ் ஆதவன் வீட்டிற்கு சென்றார் அப்போது ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டது அதனால் மாதேஷ் ஆதவன் வீட்டிற்கு பின்னால் சென்று பார்த்தார் அப்போது தடை செய்யப் பட்ட போதைப் பொருட்களை ஒரு லாரியில் வியாபாரத்திற்காக வடமாநிலங்களில் விற்பனை செய்ய ஏற்றிக்கொண்டு இருந்தான் அதை பார்த்ததும் மாதேஷ் அதிர்ச்சி அடைந்தான் உடனே அதை தன் கைபேசியில் படம் பிடித்தார் அதன்பின் அங்கிருந்து தப்பித்து விட்டான். மறுநாள் காலையில் மாதேஷ் அந்த ஆதாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்தார் , வழக்கை விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று அந்த அதிகாரி கூறினார் அதனால் மாதேஷ் வீட்டிற்கு வந்து விட்டார் , சிறிது நேரம் கழித்து அந்த அதிகாரி தன் தொலைபேசி மூலம் ஆதவனுக்கு தகவல் கூறினார் அதை கேட்டதும் ஆதவன் அதிர்ச்சி அடைந்தான் அதனால் உடனே மாதேஷை கொல்ல திட்டமிட்டார் அவன் வீட்டுக்கு சென்று பார்த்த போது மாதேஷ் இல்லை, என்ன செய்வது என்று தெரியாமல் ஆதவன் இருந்தான். ஆதவன் தன்னை கொல்ல நினைக்கிறார் என்பதை மாதேஷ் அறிந்தார், அஞ்சனா ஆதவன் வீட்டிற்கு சென்றதால் மாதேஷ் அஞ்சனா வின் வீட்டில் யாருக்கும் தெரியாமல் இரண்டு நாட்கள் இருந்து வந்தார். ஆதவன் மாதேஷை கொல்ல வெறியோடு தேடிக் கொண்டு இருந்தான்.

கதை தொடர்கிறது....