webnovel

வேட்டையன்

Iniyan_Siva · Ação
Classificações insuficientes
20 Chs

சுழல் 1

மறுநாள் காலையில் புவனேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், சக நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள், யாரேனும் பழிவாங்குவதற்காக இப்படி செய்தார்களா என்று நண்பர்களுக்கும் தெரியவில்லை ஆனால் அனைவரும் இறந்து கொண்டே இருக்கிறார்கள். அப்போது தர்ஷன் ஒரு வித்தியாசமான முறையில் தன் நண்பர்களிடம் நடந்து கொண்டான் அடிக்கடி மற்றவர்கள் மீது கோபப் படுகிறான் இதை அனைவரும் கவனித்தார்கள், தர்ஷன் மீதும் அவர்களுக்கு சந்தேகம் எழும்பியது. சஸ்மிதா சங்கவி ஸ்வேதா ஹர்ஷினி இவர்கள் அனைவரும் ஒரு நாள் இரவில் ஒன்று கூடி இருந்தனர் அப்போது ஒவ்வொருவரும் தான் கண்ட விஷயங்களையும் வித்தியாசத்தையும் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். பெண்கள் அனைவருக்கும் ஒரே ஒரு சந்தேகம் தான் இருந்தது இவை அனைத்து கொலைகளும் செய்பவர்கள் தன் உயிர் நண்பர்கள் தான் என்று அந்த நான்கு பெண்களுக்கும் தெரியவந்தது. அப்போது தினேஷ் அந்த நான்கு பெண்களும் பேசுவதை அவர்களுக்கு தெரியாமல் கேட்டு விட்டான். உடனே அவன் தன் நண்பர்களிடம் கூறினான், அவர்கள் மீதம் இருக்கின்ற நான்கு பெண்களை கொல்ல திட்டமிட்டனர். அப்போது உடனே அனைத்து பெண்களும் காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம் என்று சென்றார்கள் அப்போது ஒருவன் வாகனத்தை மறைத்தான் அப்போதுதான் அந்த நான்கு பெண்களும் ஒன்றை கவனித்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். தன் சக நண்பர்களிடம் இருந்த அனைத்து ரத்த காயங்களும் தழும்புகளும் அவனிடம் இருந்தது. இதை கண்டதும் நான்கு பெண்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அவன் வாகனத்தின் அருகில் வந்து தனக்கு உதவி செய்யுமாறும் என் என்னை அருகில் உள்ள ஒரு வீட்டில் இறக்கி விடவும் அவன் கேட்டுக் கொண்டான் அதன்பின் அவன் அந்த நான்கு பெண்களிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண்டான் அப்போதுதான் தெரிந்தது அவன் பெயர் " இனியன்" , இவன் இங்கே தான் வசித்து வருகிறான் என்றும் தெரியவந்தது.