webnovel

வேட்டையன்

Iniyan_Siva · Action
Not enough ratings
20 Chs

வேட்டை 3

ஆதவனும் சபரி ஒரு நாள் இரவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர் அப்போது தூரத்தில் ஒரு பொருள் எரிந்து கொண்டிருப்பதை கண்டார்கள் உடனே அங்கு சென்று பார்க்க வேண்டுமென்று நினைத்தார்கள் அதனால் உடனே அவர்கள் அங்கு சென்றான் ஆதவனும் சபரியும் அருகில் சென்று பார்த்தால் ஒரு அருவாள் மட்டும் அருகில் இருந்தது. இந்த அருவாள் சந்துரு வைத்திருந்த அழுவாள் என்று சபரி கூறினான் திடீரென ஒரு சத்தம் கேட்டது ,சபரி திரும்பி பார்த்தான் அப்போது யாரோ சபரியை பின்புறம் அடித்தார், உடனே சபரி மயக்கம் ஆகிவிட்டான் விழித்துப் பார்த்தால் ,சபரி தன் நண்பர்களுடன் இருக்கிறான் சபரிக்கு என்ன நடக்குது என்று புரியவில்லை, வெளியே சென்று பார்த்தால் ஆதவன் இறந்து கிடந்ததை பார்த்தான் ,காவல் அதிகாரி அவரிடம் விசாரணை நடத்தியபோது எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினான் இதுவும் சந்துரு உடைய வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைத்தார்கள் அப்போது சுவேதா ஒன்றை மட்டும் கவனித்தால் சபரி அணிந்திருந்த சட்டையில் ரத்தக்கறை பட்ட ஒரு கையின் அச்சு மட்டும் இருந்ததை கவனித்தாள். ஆனால் அவள் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை.

அதன்பின்...

ராஜ் மறுநாள் இரவில் தன் தாயுடன் பேசிக்கொண்டிருந்தான் அப்போது தினேஷ் வெளியில் சென்று விட்டு வரலாம் என்று கூப்பிட்டான் உடனே ராஜ் அவனுடன் புறப்பட்டான். சென்றவர்கள் மறுநாள் காலையில்தான் வீட்டிற்கு வந்தார்கள் ஆனால் வந்தது தினேஷ் மட்டும் தான் ராஜ் வரவில்லை சக நண்பர்கள் ராஜ் எங்கே என்று கேட்டார்கள் அதற்கு தினேஷ் அவன் எங்கு சென்றான் என்று எனக்கு தெரியவில்லை அவன் காணாமல் போய் விட்டான் என்று நண்பர்களிடம் கூறினான் ஆனால் சக நண்பர்கள் அதை நம்பவில்லை ராஜ் வந்துவிடுவான் என்று நம்பிக்கையில் அனைவரும் இருந்தனர் சிறிது நேரம் கழித்து காவல்துறை வாகனம் வந்தது பின்புறம் மற்றொரு வாகனம் வந்தது அதில் ராஜ் இறந்து கிடந்தான். அப்போது காவல்துறை விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி சக நண்பர்களை விசாரணை நடத்தத் தொடங்கினார்கள் அப்போது சஸ்மிதா, ராஜ் மற்றும் தினேஷ் சென்ற இரு சக்கர வாகனத்தை கவனித்தால், அப்போது அந்த வாகனத்தின் ஒரு பகுதி நொறுங்கிய படி இருந்தது ஆனால் இதை அவள் பொருட்படுத்தவில்லை.