webnovel

நெருப்பு வளையம் 1

காவல்துறை அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் மாறனை பிடித்தே ஆக வேண்டும் என்று திட்டம் போட்டனர் மாறனை எங்கு பார்த்தாலும் சுட்டுக் கொல்ல உத்தரவு அரசு பிறப்பித்தது. மீண்டும் மாறன் இனியனின் தொலைபேசிக்கு அழைத்தான், அவன் தைரியமாக அடுத்து நான் விஜய்யின் அலுவலகத்தில் தான் வெடிகுண்டு வைக்க போகிறேன் என்று இனியனிடம் கூறினான். இனியன் வேரு ஒரு திட்டம் போட்டான், மாறன் அலுவலகத்திற்கு உள்ளே வர தொடங்கினான் ஆனால் இப்போது அவன் கண்கள் தெரியாதவர் போல் வேடமிட்டு வந்தான், அலுவலகத்தில் சில மக்கள் புகார்களை குடுக்க நின்று கொண்டிருந்தார்கள் மாறனும் புகார் குடுப்பது போல் மக்களோடு மக்களாக நின்று கொண்டிருந்தான்.

திடீரென இனியன் மாறன் முன் வந்து நான் இப்போது உண்ணை கைது செய்யப் போகிறேன் என்று நேராகவே மாறனிடம் கூறினான், உடனே மாறன் கண் தெரியாதவர் போல் நடித்தான் ஆனாலும் இனியன் தைரியமாக மாறனை சட்டையை பிடித்து ஒரு அறைக்கு அழைத்து சென்றான். இனியன் நீ மாறன் தான் என்பது எனக்கு தெரியும் என்று மாறனிடம் கூறினான் அப்போது மாறன் நடிப்பதை நிறுத்தி விட்டு சிரித்தான்.

மாறன் இனியனிடம் எப்படி எண்ணை கண்டு பிடித்தாய்? என்று கேட்டான் அதற்கு இனியன் சுலபமாக பிடித்தேன் என்று கூறினான்.மாறனிற்கு புரியவில்லை எப்படி? என்று கேட்டான் அதற்கு இனியன் உன்னுடைய திட்டம் தான், நீ அங்கு இருப்பவர்களை பொதுமக்கள் என்று நினைத்தாய் ஆனால் அலுவலகத்தில் இருந்த அனைவரும் காவல் அதிகாரிகள் தான், உன்னிடம் பொதுமக்கள் போல் வேடமிட்டனர். அலுவலகத்திற்கு உள்ளே நீ மட்டும் தான் நுழைந்தாய் அதனால் உன்னை சுலபமாக பிடித்தேன் இது என்னுடைய திட்டம் அப்படி தான் இருக்கும் என்று இனியன் கூறினான்.

அதன்பின்....