webnovel

வெக்கை

இனியன் அந்த விஷயத்தை அறிந்த உடன் உடனே அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கச் சொன்னான் ஆனால் அவன் எந்த பேருந்து நிலையம் என்று கூறவில்லை எப்படி கண்டுபிடிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. அப்போது மாறனிடமிருந்து அழைப்பு வந்தது உடனே இனியன் எந்த இடத்தில் வைக்க போகிறாய்? என்று கேட்டான் அதற்கு ஆதி இறந்த இடத்திற்கு அருகில் இருக்கும் பேருந்து நிலையம் என்று தைரியமாக கூறினான். இனியன் மாறனை கண்டிப்பாக பிடித்து விபத்தை தடுக்க வேண்டும் என்று நினைத்தான் , உடனே அங்கிருந்த பேருந்து நிலையத்திற்கு சென்று அனைவரையும் சோதனை செய்தான் அங்கிருந்து சிசிடிவி கேமராவையும் ஒரு காவல் அதிகாரி பார்த்து கொண்டு இருந்தார்.

அப்போது மாறன் பேருந்து நிலையத்திற்கு உள்ளே சென்றான் ஆனால் அவனை யாராலும் அடையாளம் காண முடியவில்லை ஏனென்றால் அவன் 90 வயது கிழவன் போல் மாறுவேடத்தில் வந்தான் அங்கிருந்த காவல் அதிகாரிகள் ஒருவருக்கும் அடையாளம் தெரியவில்லை மாறன் இனியனுக்கு நேராகவே நின்றான் இனியன் பக்கத்தில் தான் நின்றுகொண்டிருந்தான் ஆனால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை, மாறன் வெடிகுண்டை ஒரு கடைக்கு பக்கத்தில் வைத்து விட்டு சென்றான் மாறன் கூறியது போல் வெடிகுண்டு வெடித்தது ஆனால் இனியனால் தடுக்க முடியவில்லை.

இனியன் மாறன் மீது கோபமடைந்தான்.

மாறன் மீண்டும் இனியனின் தொலைபேசிக்கு அழைத்தான் இனியன் அந்த அழைப்பை பின்தொடர்ந்தது (track) பார்க்க சொன்னான் ஆனால் அவர்களால் காண முடியவில்லை ஏனென்றால் வெவ்வேறு இடங்களை காண்பித்தது. மாறன் இனியனிடம் அடுத்து எங்கே வெடிகுண்டு வைக்க போகிறான் என்று கூறினான். அவன் அருகில் இருக்கும் ஒரு பொருள் காட்சி மைதானத்தில் தான் வைக்க போகிறேன் என்றும் உன்னால் என்னை பிடிக்க முடியாது என்று மீண்டும் தைரியமாக கூறினான்.

இனியன் அந்த மைதானத்தில் பாதுகாப்பை பலப்படுத்தினான் இச்சமயம் அவனை பிடித்தே ஆக வேண்டும் என்று நினைத்தான் ஒரு இடம் விடாமல் சோதனை நடத்தினான் இனியன் அனைத்து வயதானவர்களையும் சோதனை செய்தான். அப்போது மாறன் மீண்டும் மைதானத்திற்கு உள்ளே வந்தான்.

ஆனால் இப்போது அவன் வந்திருப்பது கோமாளி வேடத்தில். மாறன் தைரியமாக அங்கும் இங்கும் ஆடி மக்களை அவன் புறம் வேடிக்கை பார்க்க வைத்தான் , மாறன் இனியன் எதிரில் தான் மீண்டும் நின்று கொண்டிருந்தான் ஆனால் இனியன் கண்டுபிடிக்க முடியவில்லை. மாறன் தைரியமாக வெடிகுண்டை ஒரு இடத்தில் வைத்து விட்டு சென்றான் ஆனால் இனியனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் வெடிகுண்டு வெடித்தது அதனால் மாறனைப் பிடிக்க அரசு உடனே இராணுவத்தை அனுப்பி வைத்தது.

அதன்பின்.....