webnovel

அதிவேகம் 2

கவிதா தேவாவிற்கு அண்ணண் இருப்பதை கூறியவுடன் அப்போது தான் இனியனிற்கு ஒன்று நினைவுக்கு வந்தது, தேவா இறப்பதற்கு முன் இனியன் தேவாவிடம் ஏன் இப்படி செய்தாய்? என்று அதே கேள்வியை கேட்டான் அதற்கு தேவா "நான் வேரும் இந்த மகா யாகத்தை நடத்தியவன் தான் யாகத்தை திட்டமிட்டவன் யார் என்று உனக்கு தெரியாது" என்று கூறியதை இனியனின் நினைவிற்கு வந்தது. மாறன் உன்னையும் கொள்ள திட்டம் போட்டுள்ளதையும் கவிதா இனியனிடம் கூறினாள். உடனே கவிதாவிடம் மாறன் இப்போது எங்கு இருக்கிறான்? என்று கேட்டான்.

அப்போது இனியனின் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது அதில் மாறன் விஜய்யை கொன்று விட்டு தப்பித்து விட்டான் என்று தகவல் வந்தது. இனியன் உடனே அங்கிருந்து புறப்பட்டான் அப்போது கவிதாவின் வீட்டிற்கு ஒரு கார் நுழைந்தது அதில் மாறன் இருந்தான். மாறன் என்னை பார்த்தால் என்னைக் கொன்று விடுவான் அதனால் நான் உடனே தப்பிக்க வேண்டும் என்று இனியன் திட்டம் போட்டான். அதேபோல் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டம் வழியாக தப்பித்து விட்டான்.

இனியன் உடனே விஜய்யின் அலுவலகத்திற்கு சென்றான் அங்கு விஜய் இறந்த நிலையில் இருந்தான் பின் மாறனை உடனே கொள்ள வேண்டும் என்று திட்டம் போட்டான். சிறிது நேரம் கழித்து இனியனிற்கு ஒரு அழைப்பு வந்தது அதில் உன்னால் என்னை பிடிக்க முடியாது என்றும் அடுத்த குண்டு வெடிப்பு பேருந்து நிலையத்தில் தான் வெடிக்கப் போகிறது என்று தைரியமாக மாறன் இனியனிடம் கூறினான்.

அதன்பின்.....