webnovel

வேட்டையன்

Iniyan_Siva · 武侠
分數不夠
20 Chs

வழிகள் 2

நான் புகார் கொடுத்தது ஆதவன், புவனேஷ் ,ராஜ், மற்றும் ஆகாஷ், இந்த நான்கு பேர் மீதுதான் ஆனால் நீதிமன்றத்திற்கு ஆஜரானார்கள் தர்ஷன், சரண் ,சபரி ,தினேஷ் ஆகிய நால்வரும். அதைக் கண்டு நான் மிகவும் குழப்பம் அடைந்தேன் .நான் இவர்களை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்று நீதிமன்றத்தில் கூறினேன் என் சகோதரியை இவர்கள் கொல்லவில்லை என்று நீதிபதியிடம் கூறினேன் ஆனால் வழக்கை திசை திருப்ப சரண், சபரி, தினேஷ் ,தர்ஷன், ஆகிய நால்வரும் நாங்கள் இதைச் செய்யவில்லை என்றும் நாங்கள் இந்த ஊருக்கு வரவில்லை என்றும் அவர்கள் நீதிபதியிடம் கூறினார்கள் ஆனால் இனியன் ஒப்புக்கொள்ளவில்லை அதற்கான ஆதாரமும் சரியாக கிடைக்கவில்லை. ஆதாரம் கிடைக்காததால் இந்த வழக்கு தள்ளி போடப்பட்டது சில மாதம் கழித்து இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் இந்தக் கொலையை விபத்து என்று மாற்றி அவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படாமல் தான் வைத்திருந்த அரசியல் பலத்தாலும் சட்டத்தை ஏமாற்றி நிம்மதியாக வெற்றி பெற்றனர். இதனால் நான் மிகுந்த கோபத்துக்கு உள்ளானேன் . அதனால் இவர்களை கொல்ல வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இவர்களைப் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை சில தினங்களுக்கு முன்புதான் நான் இந்த எட்டு நபர்களை கொடைக்கானலில் பார்த்தேன் ,அப்போதுதான் நான் சிறிது திட்டம் போட்டு கொல்ல ஏற்பாடு செய்தேன் அதைப்போல் நான் அந்த நான்கு நபர்களை கொன்று விட்டேன் அந்தப் பழியையும் இங்கே சுற்றித்திரிந்த சந்திரன் மீது நானும் போட்டுவிட்டு சட்டத்திலிருந்து தப்பித்து விட்டேன். ஆனால் இவர்கள் தாங்கள் தோழிகளான ஐஸ்வர்யா காவியா மற்றும் சக நண்பர்களை கொல்லுவார்கள் என்று நான் நினைக்கவில்லை அதனால்தான் நான் இவர்களை இங்கு அழைத்து வந்து உங்கள் அனைவரிடமும் உண்மையைக் கூறுமாறு கூறினேன். அவர்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கால் எனக்கு நடந்த சோகத்தை விபத்தாக மாற்றிவிட்டார்கள் ஆனால் இவர்கள் இப்போது செய்த கொலையை அப்படி மாற்றி விட கூடாது என்பதால் இவர்களை இங்கு அழைத்து வந்தேன். இப்போது அந்த கொலைகளுக்கு ஆதாரம் கிடைத்து விட்டது எனவும் இவர்களே தன் வாயால் கூறிவிட்டனர் அதனால் இனி இவர்களை சட்டம் கவனித்துக்கொள்ளும் என்று அனைவரிடமும் கூறினான் இனியன்.

அப்போது.....