webnovel

வேகம் 2

இனியன் ஆதி இறந்து கிடந்த இடத்திற்கு சென்றான் உடனடியாக ஆதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் ஆனால் அவனை காப்பாற்ற முடியவில்லை. தேவா தான் ஆதியைக் கொன்றான் என்று தெரியாமல் இனியன் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினான் , அப்போது விஜய் அந்த சம்பவத்தை நினைவு படுத்திக் கொண்டு இருந்தார். அந்த அடையாளம் தெரியாத நபர் என் முன்னால் ஓடிக் கொண்டிருந்ததான் அப்போது ஆதியை கத்தியால் குத்திக் கொன்றது யார்? என்று இனியனிடம் கேட்டார். இனியனும் தெரியவில்லை என்று கூறினான் தேவா அவர்களை சிந்திக்க விடாமல் தொந்தரவு செய்து கொண்டு இருந்தான், இனியன் விஜய்யிடம் நானும் தேவாவும் வீட்டிற்கு சென்று வருகிறோம் என்றனர். தேவா வரும் வழியில் இனியனையும் கொன்று விடலாம் என்று திட்டம் போட்டான், இனியனும் தேவாவும் வீட்டிற்கு உள்ளே வந்தவுடன் இனியன் கதவை மூடிவிட்டு தேவாவை சரமாரியாக அடித்தான். தேவா நல்லவன் போல் நாடகமிட்டான் அப்போது இனியன் ஏன் ஆதியை கொன்றாய் என்று கேட்டான் அதற்கு தேவா எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றும் நான் ஏன் ஆதியை கொள்ள வேண்டும் என்று கேட்டான். அதற்கு இனியன் நடிக்காதே நீ ஆதியை கொன்றதை என் கண்ணால் பார்த்தேன் என்று கூறினான், அதற்கு தேவா 'ஓ பார்த்து விட்டாய்யா? என்று சிரித்தபடி கேட்டான்'.

இனியன் மீண்டும் அடித்து, ஏன் ஆதியை கொன்றாய் என்று கேட்டான் அதற்கு தேவா என்னைக் காட்டிக் கொடுப்பவனை நான் விட்டு வைப்பேனா? என்று கேட்டான். இனியனிற்கு அப்போது தான் புரிந்தது இவன் தான் அந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணம் என்று. தேவாவை கயிற்றால் கைகளையும் கால்களையும் கட்டினான் அதன் பின் அவனை விஜய்யின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான். விஜய்யிடம் இனியன் ஏற்கனவே தேவா தான் ஆதியைக் கொன்றான் என்பதை கூறிவிட்டான் அதனால் விஜய்யும் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தார். தேவாவிற்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் தெளிவாக பொருந்தியது, இனியன் தேவாவிற்கு எதிராக சாட்சியும் கூறினான் பின் தேவா தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான் நீதிமன்றம் தேவாவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தேவாவும் இறந்து விட்டான்.

அதன்பின்.......