webnovel

யாகத்தின் தொடக்கம்

இனியன்: ராஜனை கொன்ற பிறகு நாங்கள் நினைத்ததை நடத்த முடியும் என்று திட்டம் போட்டோம் அதற்கு எங்களைச் சேர்ந்த ஒருவர் இங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தோம் அதனால் ராஜனின் வளர்ப்பு மகனாக இருந்தேன்.

மாறன்: எனக்கு இன்னும் சரியாக புரியவில்லை.

இனியன்: ராஜனின் மகன் இறந்த பிறகு அவனை என் தந்தையும் சில கூட்டாளிகளும் எங்கள் இடத்திற்கு எடுத்துச் சென்றனர். நான் தான் ராஜனின் வீட்டில் இருந்து தப்பித்த சிறுவன்.

அந்த சம்பவத்தை தான் நீங்கள் ராஜனும் மனைவியும் இறந்து விட்டார்கள் ராஜனின் வளர்ப்பு மகன் தப்பித்து விட்டான் என்று செய்திகள் பரப்பினர்.

ராஜனின் மகன் பெயர் இனியன் என்று கேள்விப்பட்டேன் அதனால் என் பெயரும் இனியன் என்று மாற்றிக் கொண்டேன் பின் யாருக்கும் இந்த ரகசியம் தெரியாமல் தனியாக வளர்ந்தேன். அதன் பின் தான் விக்ரமும் தேவாவும் இணைந்தார்கள்.

நான் ராஜனின் வளர்ப்பு மகன் இல்லை.

மாறன்: அதன் பின் என்ன நடந்தது?

இனியன்: சில வாரங்களுக்கு பிறகு என் தந்தையையும் கூட்டாளிகளையும் இந்திய இராணுவத்தினர் கொன்று விட்டார்கள் என்ற செய்தியை அறிந்தேன்.

மாறன்: நீ எப்படி வெடிகுண்டுகளை வெவ்வேறு இடத்தில் வைத்தாய்?

இனியன்: அது உனக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் நான் தேடுவது போல் நடித்து நான் தான் வெடிகுண்டுகளை வைப்பேன்.

மாறன்: எப்படி?

இனியன்: நீ பேருந்து நிலையம் என்று சொன்னால் நான் உன்னை தேடுவது போல் நடிப்பேன். காவல் அதிகாரிகள் வாகனத்தில் தான் வெடிகுண்டை எடுத்து வருவேன் அது யாருக்கும் தெரியாது.

பின் யாரும் பார்க்காத நேரத்தில் அந்த வெடிகுண்ட வைத்து விடுவேன். அது நீ வைத்த மாதிரி நினைத்து விடுவார்கள்.

மாறன்: திட்டம் அனைத்தும் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இதை எல்லாம் யார் சொல்லி செய்கிறாய்?

இனியன்: எனக்கு மேலே நூறு பேர் இருக்கிறார்கள் அவர்களின் தலைவர் யார் என்று தெரியாது, எனக்கு கட்டளை வரும் நான் செய்வேன்.

மாறன்: உனக்கு தெரியாத ஒரு உண்மை இருக்கு அது என்னன்னு தெரியுமா?

இனியன்: எனக்கு தெரியாத உண்மையா?

மாறன்: ஆமாம்.

இனியன்: என்ன அது?

மாறன்: நீ உன் தந்தை இறந்து விட்டார் என்ற செய்தியை அறிந்தது சரி தான் ஆனால் அவருடன் மற்றோரு சிறுவன் இருந்தது உனக்கு தெரியாது அல்லவா?

இனியன்: புரியவில்லை.

மாறன்: நீ இறந்து விட்டான் என்ற நினைத்த ராஜனின் மகன் தான் நான், உன் முன் மாறனாக நின்றுகொண்டிருகிறேன்.

இனியன்: எப்படி இது சாத்தியம்?

மாறன்: உண்மை தான். நான் உயிரோடு தான் இருந்தேன். உன்னை கொள்வதற்காகவே சாவில் இருந்து மீண்டு வந்தேன்.

இனியன்: ஆனால் ராஜன் ஒரு மகன் தானே வளர்த்தார் ஆனால் நீயும் தேவாவும் இரட்டை சகோதர்களே?

மாறன்: ஆம், அது உண்மை தான் நாங்கள் இரட்டையர்கள் என்று ராஜனுக்கே தெரியாது.

இனியன்: அது எப்படி?

மாறன்: நான் ஒரு இடத்தில் இருந்தேன் என் தம்பி வேறொரு காப்பகத்தில் இருந்தான்.

இனியன்: அப்போது ஊரில் இருக்கும் உன் அம்மா?

மாறன்: ராஜன் இறந்த பின் நானும் என் தம்பியும் மற்றொரு வளர்ப்பு தாய்யிடம் வளர்ந்தோம் அவள் தான் கவிதா. அன்று நீ தேவா இறந்த விஷயத்தை சொல்ல போனது என் வளர்ப்பு தாய்யிடம் தான்.

இனியன்: அப்போ நான் வந்தது தெரியுமா?

மாறன்: தெரியும்.

இனியன்: எப்படி எண்ணை கண்டு பிடித்தாய் ? யார் இதை அனைத்தும் உனக்கு கூறியது ?

யார் அவன்?

(என்று இனியன் கேட்டவுடன்)

(திடீரென ஒரு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது, வலது புறத்தில் இருந்து ஒரு குண்டு இனியனின் தலையில் பாய்ந்தது)

"இனியன் இறந்த விட்டான்".

மாறன் அதிர்ச்சி அடைந்தான்.

ஆனால் அங்கு யாரும் இல்லை.

"இனியனை கொன்றது யார்?"

" அவனுக்கும் இனியனுக்கும் என்ன சம்பந்தம்?"

"பதில் தேட ஆரம்பித்தான் மாறன்"

" மகா யாகம் II "