webnovel

களம் 1

இனியன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். அவன் உடன் இரண்டு நண்பர்கள், அவர்கள் மூவரும் அடுக்கு மாடி குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர். ஒரு நண்பரின் பெயர் 'விக்ரம்'. மற்றொரு நண்பரின் பெயர் 'தேவா'. இனியன் விக்ரம் தேவா மூவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வந்தார்கள். விக்ரம் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறான். தேவா ஒரு திரைப்பட இயக்குனர்கள் போல் ஆக வேண்டும் என்று வாய்ப்பு தேடி வருகிறான். மூவரும் வார இறுதியில் விடுமுறையை கொண்டாட செல்வார்கள். அதே போல் மே மாதம் இரண்டாம் தேதி அவர்கள் கொண்டாட போனார்கள். அப்போது மூவரும் விளையாட்டாக ஒருவர் மீது ஒருவர் சில சவால்களை கூறுவார்கள், அப்போது தேவா இனியனிடம் ஒரு பெண்ணிடம் தன் காதலை சொல்ல வேண்டும் என்று ஒரு விளையாட்டாக சவால் விடுத்தான். இனியனும் சவாலை ஏற்றுக் கொண்டான் ,மறு நாள் காலையில் மூவரும் அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு இனியனுடன் சென்றனர். அவர்கள் ஒரு பொழுதுபோக்கு இடத்திற்கு சென்றனர். அங்கு இனியன் ஒரு பெண்ணிடம் தன் காதலை சொன்னான் அவள் பெயர் 'திவ்யா'. ஆனால் அவள் ஏற்றுக் கொள்ள வில்லை, அவள் அங்கிருந்து சென்று விட்டாள், ஆனால் அவன் நண்பர்கள் இனியனைப் பார்த்து கேலி செய்தார்கள். இனியன் கோபமடைந்து வீட்டிற்கு சென்றான், மறு நாள் அதே பெண்ணிடம் மீண்டும் தன் காதலை சொன்னான் ஆனால் அவள் மருத்தால் இனியன் அவளிடம் கெஞ்சினான் திவ்யா கோபமடைந்து இனியனை கன்னத்தில் அரைத்தால். அப்போது அவன் நண்பர்கள் இனியனை வீட்டிற்கு அழைத்து சென்றனர், இனியன் மனவேதனையில் இருந்தான். விக்ரமும் தேவாவும் அவனை சமாதானம் செய்கிறார்கள் ஆனால் அவன் அழத் தொடங்கினான், அவன் நண்பர்கள் வீட்டின் ஜன்னல் அருகில் உட்காரவைத்தார்கள். வீட்டிற்கு அருகில் ஒரு குழந்தைகள் பூங்கா இருக்கும் இனியன் ஜன்னல் வழியாக அப்பூங்காவை பார்த்துக் கொண்டு இருந்தான். அதன்பின் அவன் மனம் அமைதியானது.

அப்போது...