webnovel

இரவை சுடும் வெளிச்சம்

இயல்பான காதல் கதையில் ரஞ்சித்துக்கும், தீப்திக்கும் நடந்தது என்ன அவர்கள் காதலில் ஜெயித்தார்களா

kattupaya_s · Hiện thực
Không đủ số lượng người đọc
10 Chs

இரவை சுடும் வெளிச்சம் part4

ராமின் உதவி தீப்திக்கும், ரஞ்சித்துக்கும் ஆறுதலாய் இருந்தது. சொன்னபடி மறுநாள் பிரதீப் வரவில்லை. அவனுடைய அலுவலகத்துக்கு போன் செய்த போதும் அவன் ஆபிசுக்கு வரவில்லை என சொன்னார்கள். பிரதீப்புக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்த போது அவனிடமிருந்து கால் வந்தது. சார் எங்கே இருக்கிறீர்கள் உடனடியாக பார்க்கவேண்டும் என்று சொன்னான் . குறிப்பிட்ட இடத்தை சொல்லி வர சொன்னான். ராம் சார் என்ற குரல் கேட்டு திரும்பினான் . இவர் எங்க பாஸ் மாதவன். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ராம் .உக்காருங்க ராம் இவர்கள் ஏதோ சின்னப்பிள்ளை கண்ணாமூச்சி போல ஐபோன் வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் . நான் விஷயத்துக்கு வரேன்

எனக்கு அந்த ஐபோன் வேணும் . உங்களுக்கு எவ்வளவு வேணும் . சீக்கிரம் சொல்லுங்க . நீங்க நினைக்கிற மாதிரி அது அவ்வளவு சுலபமில்லை . ரெண்டு பேர் செத்துருக்காங்க . அதுக்கான காரணம் தெரியாம நான் அதை உங்களுக்கு குடுக்க போறதில்லை . என்ன பெரிய காரணம் நான் பணம் கொடுத்தேன் அதையும் வாங்கிகிட்டு எஸ்கேப் ஆக பார்த்தாங்க . சரி ராம் நீங்க நேரிடையா மோதறீங்க அது ரொம்ப பிடிச்சிருக்கு என்றான் மாதவன். நான் நியாயம்தான் பேசறேன். உங்க கூட மோதலை .சரி நான் என் வழியிலே போறேன் . நீங்க போகலாம் ராம் என்றான் . 

ரஞ்சித்திடம் விஷயத்தை சொன்னான் . மாதவனா அந்த exports கம்பெனி ஓனரா ? ஆமாம் அவரே இதுல சம்பந்தபட்டிருக்காரு . பேசாம கொடுத்துட்டா என்ன . அவன் எதுக்கும் துணிஞ்சவன் மாதிரி இருக்கான். நாளைக்கு உனக்கோ தீப்திக்கோ ஏதாவது ஆபத்து வரலாம். ஐபோன் unlock செய்தார்கள் . அதில் material அனுப்பியதற்கான receipt இருந்தது . அது எந்த இடத்துக்கு போயிருக்கிறது என்பதுதான் மாதவனுக்கு தேவையான தகவல். அது மாதவனுடைய போன் இல்லை என்பது தெரிந்தது குருமூர்த்தி என்ற டயர் தயாரிக்கும் கம்பெனி ஓனர் போன் அது . அவர் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார் என்பதும் தெரிய வந்தது .

 நாம இந்த குருமூர்த்தியை பத்தி விசாரிப்போம் என்றான் ராம். அந்த போன் நம்மகிட்ட இருக்குற வரை மாதவன் நம்மள எதுவும் செய்யமாட்டான். ரஞ்சித் இந்த கேஸ் நீண்டு கொண்டு போகிறதே சார். நிச்சயம் பண்ணிடுங்க.. கல்யாணம் அப்புறம் பண்ணுங்க என்றான். அது மாதிரி செய்யலாம். நான் தீப்தி அப்பாகிட்ட பேசி பார்க்குறேன் என்றான் .நிச்சயத்துக்கு தீப்தியின் அப்பா சம்மதித்து விட்டார். அதற்கான ஏற்பாடுகளும் நடை பெற்றன . கார்த்திக்கும் இந்த ஏற்பாடுகளில் கலந்து கொண்டான் . முன்னமே நீ ஆசைப்பட்ட மாதிரி செய்திருக்கலாம் என்றான். தீப்தி புன்னகையுடன் கடந்து சென்றாள். போன தடவை மாதிரி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக ஜாக்கிரதையாக பிளான் செய்யப்பட்டது .Ranjith நீங்க ரூம்ல தங்குறது நல்ல இருக்காது . நம்ம நீலாங்கரை ஹவுஸ் ஒன்னு இருக்கு அங்க தங்கிடுங்க . ஊர்லேயிருந்து அம்மாவை அழைச்சிட்டு வந்திடுங்க என்றார் தீப்தி அப்பா . சரிங்க மாமா என்றான்.

குருமூர்த்தி ரொம்ப நேர்மையானவர் என்றும் அவர் காணாமல் போன பின் பிசினஸ் ஐ அவர் மகள் நேஹா நடத்துவதாகவும் சொன்னார்கள் . நேஹா தற்போது வெளிநாட்டுக்கு போயிருப்பதால் பார்க்கமுடியாது . இன்னும் சில தினங்களில் இந்தியா வந்து விடுவார் எனவும் தகவல் கிடைத்தது. அவர் காணாமல் போய் விட்ட கேஸ் இன்னும் போலீஸ் விசாரித்து கொண்டுதான் இருந்தார்கள் . தீப்தி, ரஞ்சித் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்றது. ராம் கலந்து கொண்டு வாழ்த்தினான். கார்த்திக் இனி நான் இந்த ஊரில் இருக்க விரும்பவில்லை . வெளிநாடு போக போகிறேன் என்றான்.

நேஹா இந்தியா வந்தவுடன் தனக்கு தகவல் சொல்லும்படி ராம் கேட்டுக்கொண்டிருந்தான் . தீப்தியும் ரஞ்சித்தும் கொண்டாட்ட மன நிலையில் இருந்தனர். தீப்தியின் அப்பாவுக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் மகள் ஆசையை நிறைவேற்றினோமென்று சந்தோஷப்பட்டார். அவனுங்க ஆடி முடிக்கட்டும் நாம ஆடலாம் பிரதீப் என்றான் மாதவன் . என்ன பாஸ் சொல்லறீங்க என்றான் பிரதீப் . அந்த போன் நேஹா மூலமா எப்படியும் என் கைக்கு வந்துடும் . அப்புறம் என் சரக்கை நானே எடுத்துப்பேன் என்றான் மாதவன். நேஹா மேடம் ? அதான்யா குருமூர்த்தி பொண்ணு அவகிட்ட லேசா மிரட்டினேன். போன் வந்ததும் குடுத்துடறேன்னு சொல்லி இருக்கா. அந்த குருமூர்த்தி எங்க சார்? இருக்கான் அரை பிணமா என் custody ல தான் இருக்கான் . 

நேஹா ஊரிலிருந்து வந்துவிட்டாள் . நேஹா இவனை சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தாள். இந்த போன் உங்ககிட்டயே இருக்கட்டும் ராம் . மாதவன் இதை கேட்டு மிரட்டுனாரு . நானும் தரேன்னு சொன்னேன் ஆனா என் அப்பா கிடைக்கணும்னா இதை வெச்சுதான் அவன்கிட்ட பேசணும் . உங்களுக்கு அவன் மேல சந்தேகம் இருக்கா?. நிச்சயமா அவரை அடைச்சு வெச்சிருப்பான்னு எனக்கு தோணுது. நல்லா யோசிச்சுதான் சொல்லறீங்களா . ம்ம் எனக்கு என் டாடி ரொம்ப முக்கியம் என்றாள்.நாம இதை அவன்கிட்டே கொடுக்கலாம் இதுல ஏதாவது வாய்ஸ் ரெக்கார்டர் மாதிரி செட் பண்ணி கொடுக்கலாமா என்றாள் நேஹா . அதெல்லாம் வேண்டாம் அவன் உஷாராகிவிடுவான் . நாம அந்த material மொதல்ல இங்கே கொண்டு வந்து சேர்க்கணும்.அதுக்கான ஏற்பாடுகளை மொதல்ல செய்றேன் . anyway தேங்க்ஸ் ராம் . என்னை காண்டாக்ட் பண்ணி இந்த போன் விஷயத்தை சொன்னதுக்கு . ராம் நேஹாவை நம்புவது என முடிவெடுத்தான் .

என்ன ரஞ்சித் நிச்சயம் முடிஞ்சிடிச்சி இன்னும் என்ன யோசனை என்றாள் தீப்தி . ஒரு யோசனையும் இல்லை . ஹனிமூன் எங்கே போலாம்னுதான் யோசனை பண்ணேன் . சும்மா சொல்லாத உனக்கு அந்த மாதவன் என்ன செய்வோரே னு கவலை. சே சே அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. இனிமே எல்லாம் ராம் பார்த்துப்பாரு . எனக்கு இனிமே உன்னை பாக்குறதுதான் வேலை . நேஹா மாதவனை சந்தித்தாள். என்ன மேடம் போன் இல்லாம வந்திருக்கீங்க ராம் உங்ககிட்ட கொடுக்கலியா ? எங்க அப்பாவை ரிலீஸ் பண்ணு.உங்க அப்பாவா? அது சரி உங்களுக்கு அவ்ளோ தெரிஞ்சு போச்சா ?அப்போ ஒரு முடிவோடுதான் வந்து இருக்கீங்க . இல்லை எங்க அப்பாவை ரிலீஸ் பண்ணுங்க நான் அந்த போனை இப்பவே ராம் கிட்ட சொல்லி ஒப்படைக்கிறேன் . எனக்கு ரெண்டு நாள் டைம் குடுங்க மேடம். யோசிச்சு சொல்றேன்.ஓகே என்றாள் நேஹா . ராமிடம் போன் போட்டு விஷயத்தை சொன்னாள் நேஹா . ஏன் மேடம் அவசரப்படீங்க . உங்களுக்கு ஏதாவது ஆபத்து வர போகுது. என் சந்தேகம் confirm ஆயிடுச்சி அப்பா அவன்கிட்டேதான் இருக்காரு . வேற option இல்லை நமக்கு.சரி எதுக்கும் ஜாக்கிரதையாக இருங்கள் என்றான் ராம் . என்னையே மிரட்டி பார்குறா குருமூர்த்தி பொண்ணு .. தூக்கிடுவோமா ? அப்பனை தூக்குன எனக்கு பொண்ண தூக்க தெரியாதா பிரதீப் என்றான் . என்ன பாஸ் ஆச்சு ? அவ அப்பாவை ரிலீஸ் பண்ணாதான் அந்த போனை தருவாளாம். நாம அவளையே மேல அனுப்பலாமா ? வேண்டாம் பாஸ் போலீஸ் ஏற்கனவே உங்க மேல சந்தேகத்துல இருக்காங்க . அவங்களை தூக்க வேண்டாம் சார் தீப்தியை தூக்குனா ராம் தன்னாலே வருவான் . இப்போ தீப்தியை தூக்கலாம்னு சொல்ற?. இல்ல நம்ம custody ல ஏற்கனவே குருமூர்த்தி இருக்கான் . இப்போ இந்த பொன்னையும் வெச்சுக்க முடியுமா? வேற வழி இல்லை பாஸ் என்றான் பிரதீப்.தீப்தி எப்பவும் போல வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தாள். ரஞ்சித் போன் செய்தான். அவனோடு பேசிக்கொண்டே கார் ஸ்டார்ட் செய்தாள் தீப்தி . என்னாச்சு ரஞ்சித் ஈவினிங் மீட் பன்னலாம்தானே என்றாள் . கண்டிப்பா என்றான். எதிரே கார் ஒன்று வழி மறித்து நின்றது .