webnovel

களம் 3

சக்தி தற்கொலை செய்த பிறகு, விஜய் சக்தியின் உடம்பை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார் பிறகு இனியனும் விஜய்யும் சக்தியின் வீட்டில் சோதனை நடத்தினர் அப்போது அங்கு ஒரு தொலைபேசி இருந்தது அதன் பின் பல வெடிபொருட்களும் கிடைத்தன. விஜய்யும் இனியனும் சக்தியின் தொலைபேசியை எடுத்துக் கொண்டு விஜய்யின் அலுவலகத்திற்கு வந்தனர்.

சக்தியின் தொலைபேசியை ஆராய்ந்து பார்க்கும் போது ஒரு தொலைபேசி எண்ணிடம் மட்டும் அதிக முறை பேசியுள்ளதை அறிந்தனர். அப்போது விஜய் அந்த எண்ணை பின்தொடர்ந்தார் (track). விஜய் தொலைபேசி இருப்பிடத்தை கண்டுபிடித்தார். அத்தொலைபேசி அவன் இருக்கும் இடத்தயே தான் காண்பித்தது, விஜய் அதிர்ச்சி அடைந்தார், விஜய்யும் இனியனும் அலுவலகதின் மூன்றாவது தளத்தில் இருந்தார்கள் ஆனால் தொலைபேசி தரை தளத்தில் காண்பித்தது, அத்தொலைபேசி வைத்திருபவர் மெதுவாக மேலே ஏறி வந்தான். இனியனும் விஜய்யும் கதவை நோக்கி பார்த்த படி நின்றார்கள் மற்ற காவல் அதிகாரிகளும் துப்பாக்கியுடன் கதவை நோக்கி நின்றார்கள். அந்த நபர் மெதுவாக மூன்றாவது தளத்திற்கு வந்தான் யார் அந்த நபர் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அப்போது அவ்வழியே இனியனின் நண்பன் "விக்ரம்" வந்தான்.