webnovel

அதிவேகம் 1

தேவா இறந்த உடன் இனியன் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினான் ஆனால் ஏன் விக்ரம் அந்த பொய் பழியை ஏற்று தண்டனை பெற்றான் என்பதை இனியன் சிந்தித்துக் கொண்டே இருந்தான்.

இரண்டு தினங்களுக்கு பின்...

தேவாவிற்கு அம்மா இருப்பதாக அன்று அவன் கூறியதை அவன் நினைவிற்கு வந்தது அதனால் இனியன் தேவா இறந்த தகவல்களை அவன் அம்மாவிடம் கூற தேவாவின் ஊருக்கு சென்றான்.

தேவாவின் அம்மா பெயர் 'கவிதா'. இனியன் கவிதாவை சந்திக்க அவள் வீட்டிற்கு சென்றான்.

தேவா இறந்ததை கூறியவுடன் கவிதா கதரி அழுதாள் பின், ஏன் என் மகனை கொன்றாய் என்று கேட்டால் அதற்கு இனியன் அமைதியாக இருந்தான். இனியன் கவிதாவிடம் மனிப்பு கேட்டான் , கவிதா இனியனிடம் தேவா என்ன தவறு செய்தான் என்று அழுதபடி கேட்டால் அதற்கு இனியன் அனைத்து சம்பவங்களையும் கூறினான், இரண்டு இடங்களில் வெடிகுண்டு வைத்ததும் மற்றும் அடையாளம் காண வந்த ஆதி என்ற சிறுவனைக் கொன்றது மற்றும் தன் நண்பன் விக்ரமை ஆதாரங்கள் எதுவும் இன்றி சட்டம் மூலமாக அவனை கொள்ள வைத்தது என பல உன்மையான தகவல்களை அவன் கவிதாவிடம் கூறினான்.

இதல்லாம் எப்போதும் நடந்த சம்பவங்கள்? என்று கவிதா கேட்டால் அதற்கு இனியன் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் என்று கூறினான். பின் எந்த தேதியில் நடந்தது? என்று கேட்டாள், இனியன் சில தேதிகள் கூறினான் அப்போது கவிதா உடனே அதிர்ச்சி அடைந்தாள். கவிதா இனியனிடம் இத்தேதிகளிள் தேவா என் வீட்டில் தான் இருந்தான் என்று கூறினாள், அதற்கு இனியன் 'ஆம்' அவன் உங்கள் வீட்டில் தான் இருந்தான் ஆனால் இரு தினங்கள் தானே இருந்தான்? என்று இனியன் கேட்டான். அதற்கு கவிதா 'இல்லை' நீ சொன்ன அனைத்து தேதிகளிளும் தேவா இங்கு தான் இருந்தான் என்று கூறினாள்.

இனியன் அதிர்ந்து போனான்....

இனியன் கவிதாவிடம், உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? என்று கேட்டான். கவிதா அப்போது தான் உண்மையை கூறினாள், எனக்கு பிறந்தவர்கள் இரட்டை சகோதரிகள் என்றும் தம்பி தான் உன்னுடைய நண்பன் தேவா என்று கவிதா கூறிவிட்டு, தேவாவிற்கு அண்ணண் ஒருவன் இருக்கிறான் அவன் பெயர் "மாறன்".

இனியன் மீண்டும் அதிர்ச்சியில் உறைந்து போனான்.....