webnovel

வேட்டையன்

Iniyan_Siva · Seni bela diri
Peringkat tidak cukup
20 Chs

வழிகள் 3

இனியனுக்கு நடந்த சோகத்தை கேட்டு அனைவரும் மனம் உடைந்து போனார்கள் அதன்பின் இனியன் அழுதுகொண்டே தான் வைத்திருந்த கத்தியை எடுத்து முதலில் தர்ஷசனை கொன்றான் அதன்பின் சரண் மற்றும் தினேஷ் சரமாரியாக குத்திக் கொன்றான். அந்த நான்கு பெண்களும் இனியனின் கதையை கேட்டு மிகவும் வருத்தப்பட்டனர் அதன்பின் ஹர்ஷினி, தனக்கு நடந்த சோகங்களை நினைத்து அழுது கொண்டிருந்த இனியனுக்கு அருகில் வந்து சமாதானம் கூறினாள். அப்போது உடனே இனியன் வைத்திருந்த கத்தியை வாங்கி இனியனின் வயிற்றில் குத்தினாள் அதைப் பார்த்ததும் மற்ற மூன்று பெண்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே சஸ்மிதா அவள் அருகில் சென்று அந்த கத்தியை வாங்கினால் அதன்பின் சங்கவியும் ஸ்வேதாவும் ஹர்ஷினியை வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அதன்பின் என்ன நடந்தது என்று தோழிகள் அவளைக் கேட்டார்கள். அப்போதுதான் ஹர்ஷினி யாருமே எதிர்பாராத ஒரு விஷயத்தை கூறினால். இனியன் இப்போது கூறிய விஷயங்கள் அனைத்தும் பொய்யானவை என்று கூறினாள், ஆனால் யாரும் அதை நம்பவில்லை, ஸ்வேதா எப்படி அது உனக்கு தெரியும் என்று கேட்டாள் அதற்கு ஹர்ஷினி இந்த சோகமான நிகழ்வுகள் என்னுடைய முன்னாள் காதலன் சஞ்சய்க்கு நடந்ததாகும் ஆனால் இதை இனியன் எப்படி கூறுகிறான் என்றுதான் எனக்கு தெரியவில்லை என்று கூறினாள். அவன் ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்று நான் நினைத்தேன் ஆனால் இப்போது அவனுக்கு நடந்த அதே சோகங்களை இனியன் கூறும்போது எனக்கு இவன் மீது சந்தேகம் வருகிறது, அதனால் நான் அவனிடம் போய் விசாரிக்கிறேன் என்று கூறிவிட்டு ஹர்ஷினி இனியனிடம் சென்றால்.

ஹர்ஷினி இனியனிடம் எப்படி இந்த நிகழ்வுகள் உனக்கு தெரியும் என்று கேட்டாள் ,அப்போது இனியன் சொல்ல முடியாது என்று கூறினார் , உடனே ஹர்ஷினி மீண்டும் இனியனின் வயிற்றில் கத்தியால் குத்தினால் அதன்பின் வலி தாங்க முடியாமல் இனியன் உண்மையைக் கூற தொடங்கினான். 3 ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் விபத்தில் இறக்கவில்லை அவனை நான் தான் கொடூரமான முறையில் கொன்றேன் என்று இனியன் கூறினான் , ஹர்ஷினி ஏன் அவனை கொன்றாய் என்று கேட்டாள் அதற்கு இனியன், நான் செய்த ஒரு கொலைக்கு அவன் என்னை காவல் துறையிடம் புகார் கொடுக்க இருந்தான் அதனால் அவனை கொன்றுவிட்டேன் என்று கூறினான். அப்போது சங்கவி அருகில் வந்து அவன் என்ன தவறு செய்தான் என்று கேட்டாள்.

அதற்கு.....