webnovel

வேட்டையன்

Iniyan_Siva · Seni bela diri
Peringkat tidak cukup
20 Chs

அறிமுகம் 3

இக்கதையின் மூன்றாவது அறிமுகம் புவனேஷ். இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மிகப்பெரிய வசதியுடன் கூடிய தொழில்களை செய்து வந்தார், கூடவே கட்டப் பஞ்சாயத்து தொழிலும் செய்து வந்தார். இவர்கள் இத்தனை செல்வ செழிப்புடன் வாழ முழு காரணமாக இருப்பவர் இவரின் தாத்தா மூக்கையா பாண்டியன். அதன் பிறகு இவரின் தந்தை ராஜபாண்டியன் அனைத்து பொறுப்பு களையும் பார்த்து வந்தார், இவரின் குடும்பத்தினர் அனைவரும் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். இவர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார் .ஒரு நாள் காலையில் புவனேஷ் காரில் சென்று கொண்டு இருந்தார் அப்போது ஒரு பையன் சாலையில் மயக்கத்தில் கிடந்தான் உடனே புவனேஷ் காரை நிறுத்தி விட்டு வெளியே இறங்கி வந்து பார்த்தார் அப்போது அவன் அருவாள் வெட்டு காயத்துடன் கீழே கிடந்தார் அவனை மருத்துவமனையில் சேர்த்து விட்டு அவனை பற்றி விசாரிக்க தொடங்கினான் புவனேஷ். தன்னிடம் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளியின் மகன் என்று அறிந்தான் புவனேஷ். அதன் பின் அவர் பெயர் ராம் என்றும் இவர் மனைவி பெயர் தன்யா என்றும் தெரிய வந்தது , இவரை சில நபர்கள் ஆணவக் கொலை செய்ய திட்டமிட்டார்கள் என்று தெரிய வந்தது ராம் என்பவரை கொள்ள வந்தவர்கள் வடநாட்டு வாலிபர்கள் என்றும் தன்யாவின் உறவினர்கள் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி விட்டனர். சிறிது நேரம் கழித்து ராம் இறந்து விட்டார் ஆனால் அவர் ஒரு நொடிக்கு முன்பு ஒன்று மட்டும் கூறினார் அந்த நபரின் பெயர் ஜனகர் என்றும் அவன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது அதனால் புவனேஷ் அவரைப் பிடிக்க வேண்டும் என்றும் அவர்களை யார் அனுப்பியது என்று தெரிய வேண்டும் என்று நினைத்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். இனி இந்த மாதிரி தவறுகளை யாரும் செய்ய கூடாது என்றும் இது வேகமாக முடிவுக்கு வர வேண்டும் என்று புவனேஷ் நினைத்தான் அதனால் அவனும் ஜனகரை தேடுவதில் மும்முரமாக ஈடுபட்டார்.

கதை தொடர்கிறது.....