webnovel

வேட்டையன்

Iniyan_Siva · Action
Pas assez d’évaluations
20 Chs

வேட்டை 1

ஹிபா காலையில் தூக்கத்திலிருந்து விழித்து பார்த்தாள் வீட்டில் யாருமே இல்லை எங்கு போனார்கள் என்று அவளுக்கும் தெரியவில்லை அதனால் சத்தமாக அவர்களை கூப்பிட்டாள் ஆனால் யாரும் வரவில்லை, இரவில் குடிபோதையில் கார் ஓட்டி சென்ற ஆண் நண்பர்கள் யாருமே வரவில்லை அதனால் ஹிபா வெளியே சென்று பார்க்கலாம் என்று கதவைத் திறந்தாள் அப்போது ஒரு பெண் கொல்லப்பட்ட நிலையில் வாசலில் கிடந்தாள், அது யார் என்று பார்த்தபோது நேஹா இறந்த நிலையில் கிடந்தாள். ஹிபா அதிர்ந்து போனாள் அதன்பின் வீட்டின் பின்புறம் உள்ள வழியில் வெளியே சென்று பார்க்கலாம் என்று வேகமாக ஓடி கதவை திறந்தால் ஆனால் அங்கேயும் ஒரு பெண் இறந்து கிடந்தாள் அவள் தன் தோழியான காவியா. ஹிபா மிகவும் அதிர்ச்சி அடைந்தாள், அதன்பின் சமயல் அறையில் உள்ள தனது தொலைபேசி எடுத்து யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று போனால், ஆனால் அங்கேயும் அஞ்சனா இறந்து கிடந்தால் , அப்போது உடனே ஹிபா வீட்டில் உள்ள அனைத்து கதவுகளையும் அடைத்தால், அதன் பின் சிறிது நேரம் கழித்து தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்தாள் ஆனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை, அப்போது திடீரென கதவைத் தட்டுவது போல் ஒரு சத்தம் கேட்டது ,ஹிபா மிகவும் பயந்த நிலையில் இருந்தாள் மீண்டும் மீண்டும் அந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது ஹிபா மெதுவாக கதவைத் திறக்க முயன்றாள் திறந்து பார்த்த உடன் அங்கு யாருமே இல்லை, ஆனால் ஒருவரின் காலணிகள் மட்டும் இருக்கின்றது அதைப் பார்த்தவுடன் ஒன்று மட்டும் தான் அவளுக்கு நினைவில் வந்தது அது அங்கு சுற்றித்திரிந்து பல மனிதர்களை கொடூரமாக கொன்ற சந்துருவின் காலணிகளாகும் அப்போது புரிந்தது இதையெல்லாம் செய்பவன் சந்துரு என்று ஆனால் உடனே கதவுகளை நன்றாக மூடிவிட்டு ஒரு அறையில் உட்கார்ந்தாள் அப்போது மேலிருந்து துளிகள் வந்தன என்னவென்று பார்த்தால் ஐஸ்வர்யாவின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கூரையில் மாட்டிக்கொண்டு இருந்தது அப்போது உடனே அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினாள் அப்போது நேற்று இரவு ஐஸ்வர்யாவை துரத்திய நாய் அங்கே இறந்து கிடந்தது அதனால் உடனே மாற்று வழியில் ஓடிக்கொண்டே இருந்தாள், அப்போது ஒருவர் ஹிபாவின் தலையில் அடித்து அவளை மயக்கமடையச் செய்தார்.

அதன் பின்....