webnovel

வேட்டையன்

Iniyan_Siva · Action
Pas assez d’évaluations
20 Chs

வியூகம் 3

மது அருந்திவிட்டு ஆண்கள் அனைவரும் மயக்கத்தில் இருந்தனர் அதன்பின் நடு இரவில் ஹிபா உறங்கிக்கொண்டிருந்தாள் அப்போது திடீரென ஒரு சத்தம் வந்தது அதனால் அவள் வெளியே வந்து பார்த்தால் அப்போது ஒரு பெண் காட்டிற்குள் நடந்து சென்றதைப் பார்த்தால் அதனால் அவள் வெளியே வந்து பார்த்தபோது அது ஐஸ்வர்யா என்று தெரிந்தது அவளை பின் தொடர்ந்தாள், அவள் அழுது கொண்டே ஒரு காட்டிற்குள் சென்று கொண்டு இருந்தார் அப்போது ஹிபா பின்தொடர்ந்து சென்று அவளை தடுத்து நிறுத்தினால் எங்கே செல்கிறாய் என்று கேட்டதும் அழுது கொண்டே இருந்தால் அப்போது ஒரு நாய் வெறியுடன் கடிக்க வந்தது அப்போது இரண்டு பேரும் நாயிடம் இருந்து தப்பிக்க முயன்றனர் . இரண்டு பேரும் அந்த நாயிடம் இருந்து தப்பித்து விட்டனர் அதன்பின் வீட்டுக்குள் வந்து ஹிபா ஐஸ்வர்யாவிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்டாள் அதற்கு ஐஸ்வர்யா என் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் , அவரைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்று கதறி அழுதாள். அதைக் கேட்டதும் ஹிபா வருத்தப்பட்டாள் அதன்பின் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி உறங்க வைத்தாள், நல்லதே நடக்கும் கவலைப்படாதே என்று சமாதானம் கூறிவிட்டு ஹிபா அவளைப் போய் உறங்கு என்று கூறினாள்.

மறுநாள் காலையில்....