webnovel

களம் 4

விக்ரம் வருவதைப் பார்த்து இனியன் அதிர்ச்சி அடைந்தான் காவல்துறையினர் விக்ரமை மடக்கி அடித்து மண்டியிட செய்தனர். விக்ரமின் தொலைபேசியை விஜய் வாங்கி பார்த்தார் அப்போது சக்தியின் தொலைபேசி எண் மட்டும் அதிக முறை பேசிருப்பதை கண்டார் அதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் காவல்துறை அதிகாரிகள் விக்ரமை அடித்து விசாரணை நடத்தினர். ஆனால் அவன் அமைதியாக இருந்தான் அப்போது இனியன் அவனை அடிக்காதீர்கள் என்று கதரி அழுதான் ஆனால் அவன் அமைதியாக இருந்தான். அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விக்ரமை நீதிமன்றத்தில் நிற்க வைத்தனர். ஆனால் அவன் அங்கும் அமைதியாகவே நின்றான் நீதிமன்றம் இரண்டு நாள் அவகாசம் கொடுத்தது மீண்டும் அமைதியாக இருந்தால் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக ஏற்றுக் கொள்ள படும் என்றார் நீதிபதி.

இரண்டு தினங்களுக்கு பின்.....

விக்ரமை மீண்டும் நீதிமன்றங்களுக்கு அழைத்துச் சென்றனர். அவன் மீண்டும் அமைதியாகவே நின்றான் பின் கடைசி நேரத்தில் அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். அதனால் நீதிமன்றம் விக்ரமிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இனியனும் தேவாவும் கதரி அழுதார்கள் இனியன் விக்ரமை ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டான் அதற்கு விக்ரம் "நான் வேரும் எண்ணை மட்டும்தான் இந்த மகா யாகத்திற்கு". என்றான்.

சில தினங்களுக்கு பின்...

இனியனும் தேவாவும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினார்கள். இனியன் இந்த மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நிம்மதியடைந்தான் ஆனால் விக்ரம் ஏன் இப்படி செய்தான் என்று சிந்தித்து கொண்டே இருந்தான் அப்போது தேவா தன் தாயை பார்த்து விட்டு வருகிறேன் என்று இனியனிடம் சொல்லி விட்டு சென்றான்.

அப்போது விஜய்யிடமிருந்து இனியனிற்கு அழைப்பு வந்தது அதில் அவர் பயந்த நிலையில் இனியனிடம் பேசத் தொடங்கினார், 'காலையில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது அதில்' "காய்கறி சந்தையில் மீண்டும் ஒரு வெடிகுண்டு வெடித்ததாக தகவல் வந்தது" என்று கூறினார்.

இனியன் அதிர்ச்சியில் உறைந்து போனான்.....