webnovel

வேட்டையன்

Iniyan_Siva · Acción
Sin suficientes valoraciones
20 Chs

வியூகம் 2

ஆதவன் காதலித்து வந்த அஞ்சனாவையும் , ஆகாஷ் காதலித்து வந்த காவியாவியும் , புவனேஷ் காதலித்து வந்த ஐஸ்வர்யாவையும் , ராஜ் காதலித்து வந்த நேஹாவையும் , சபரி தன் தோழியான சுவேதாவையும் ,சரண் தன் தோழியான சங்கவியையும், தர்ஷன் தன் தோழியான சஸ்மிதா வையும் தினேஷ் தோழியான ஹர்ஷினியும் ஆகிய அனைவரும் ஒன்று இணைந்தனர். இந்த எட்டு பேரும் பல பிரச்சினைகளையும் முடித்துவிட்டு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர், அதன்பின் ஒன்றாக சேர்ந்து ஒரு சுற்றுலா தளத்திற்கு செல்லலாம் என்று திட்டம் போட்டனர் அதனால் அவர்கள் கொடைக்கானல் போலாம் என்று நினைத்தனர்அதுவும் மனநலம் பாதிக்கப்பட்ட வெறி நாய் போல் மனிதர்களை இப்பவும் கொல்லுகின்ற சந்திரன் இருக்கின்ற இடத்திற்கே செல்லலாம் என்று திட்டம் போட்டனர் அங்கு சுவேதாவின் தோழியான ஹிபாவின் வீட்டிற்கு சென்று தன் நண்பர்களுடன் கொண்டாடலாம் என்று நினைத்தாள் இதை அனைவரும் ஒப்புக் கொண்டனர். அதே நேரம் அனைவரும் கொடைக்கானலுக்கு போகலாம் என்று நினைத்தனர் ஆனால் சந்திரன் அங்கு இருப்பதை அவர்கள் பொருட்படுத்தவில்லை அதனால அனைவரும் காரில் பயணிக்க தொடங்கினர். இரவு முழுவதும் பயணித்து விட்டு மறுநாள் காலையில் ஹிபாவின் வீட்டிற்கு அனைவரும் சென்றனர் , அதன் பின் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு காடுகளில் சுற்றி பார்த்து வரலாம் என்று ஹர்ஷினி கூறினாள் அதனால் ஸ்வேதா, ஹர்ஷினி, சங்கவி ,சஸ்மிதா ஆகிய நால்வரும் பக்கத்தில் இருக்கும் காடுகளுக்கு சென்று வந்தனர் அதன் பின் இரவில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்திவிட்டு பாடல்களைப் பாடிக்கொண்டும் அனைவரும் மகிழ்ச்சியாக சந்தோசமாகவும் இருந்தனர்.

அதன்பின்...