webnovel

வேகம் 1

இனியன் அந்த விஷயத்தை அறிந்த உடன் அதிர்ச்சி அடைந்தான் பின் அவன் உடனடியாக விஜய்யின் அலுவலகத்திற்கு சென்றான் அங்கு காவல்துறை அதிகாரிகள் ஏதேனும் ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்து கொண்டிருந்தார்கள் அங்குள்ள ஒரு சிசிடிவி கேமராவை ஆராய்ந்தார்கள் அப்போது ஒருவன் அதேபோல் கையில் ஒரு பெட்டி வைத்திருந்தான் அவன் ஒரு கடையில் பெட்டியை வைத்து விட்டு சென்றான். இந்த காட்சியை இனியனும் விஜய்யும் சிசிடிவி கேமராவில் பார்த்தார்கள் ஆனால் அந்த நபர் கோமாளி முகமூடியை தன் முகத்தில் அணிந்த படி நின்றுகொண்டிருந்தான் அதனால் அவன் முகம் சரியாக தெரியவில்லை. இது காவல்துறை அதிகாரிகளுக்கு மிகுந்த சந்தேகத்தையும் கோபத்தையும் உண்டாக்கியது.

இனியன் காட்சியை நன்றாக கவனித்தான் அப்போது சந்தைக்கு அருகில் ஒரு பொம்மை கடை இருந்தது உடனடியாக விஜய்யும் இனியனும் அந்த கடைக்கு சென்று விசாரித்தனர் அப்போது அந்த கடையின் சிசிடிவியில் பார்த்தான் ஆனால் அவன் முகத்தில் கையுறையை அணிந்திருந்தான், விஜய் கடையில் பணியாற்றிய சில நபர்களை அழைத்து விசாரணை நடத்தினார் அப்போது விஜய் அந்த நபரை அடையாளம் காண முடியுமா என்று கேட்டான் அதற்கு ஆதி என்ற 20 வயது நபர் என்னால் அடையாளம் காட்ட முடியும் என்று கூறினான். விஜய் ஆதியை தன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார், பின் இனியனும் தேவாவும் விஜய்யின் அலுவலகத்திற்கு சென்று ஆதியை சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது விஜய்யின் அலுவலகத்திற்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது அதில் ஒருவர் உங்களால் என்னைப் பிடிக்க முடியாது என்று விஜய்யிடம் கூறினான். உடனே விஜய் அந்த எண்ணை பின்தொடருமாரு (track) கூறினார். அந்த எண் கொண்ட நபர் ஒரு மயானத்தில் இருப்பதாக காண்பித்தது உடனே விஜய்யும் இனியனும் தேவாவும் ஆதியும் மற்ற அதிகாரிகளும் அந்த இடத்திற்கு சென்றனர் ஆனால் அங்கு ஒருவரும் இல்லை திடீரென ஒரு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது அனைவரும் நான்கு திசைகளில் சிதறி ஓடினர் விஜய் தேற்கு புறமும், இனியன் வடக்கு புறமும், ஆதி கிழக்கு புறமும், தேவா மேற்கு புறமாக பிரிந்தனர். திடீரென தேவா இருக்கும் இடத்தில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டது ஆதி அங்கு விரைந்து சென்று பார்த்தான் அப்போது அங்கு தேவாவிற்கு இடது கையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தான் ஆதி அவனை காப்பாற்ற முயன்றான் ஆதி இங்கு யாராவது வாருங்கள் என்று கத்தினான்.

அப்போது திடீரென தேவா தன்னிடம் இருந்த கத்தியால் ஆதியை குத்திக் கொன்றான். தேவா யாரும் பார்க்காத நேரத்தில் ஆதியை கொன்று விட்டு உடனே இனியனிடம் போய் ஆதியை யாரோ ஒருவர் கொன்று விட்டு ஓடி விட்டான் என்று இனியனிடம் கதரி அழுதான்.

இனியன் மீண்டும் அதிர்ச்சியில் உறைந்து போனான்...‌.