webnovel

மித்திரன் VS மகேந்திரன்

 

சத்தியமூர்த்தி வீட்டில் பாவநந்திரா சந்தோசமாய் இருப்பதை ஒளிந்து இருந்து ரசித்து கொண்டிருந்த மகேந்திரனை பின் இருந்து தட்டிய வீரா " மச்சான் இப்பிடி எவ்வளவு நாள் தன் மறைச்சு இருந்து பக்க போறிங்க போய் அவ கூட சிரிச்சு பேசலாம் இல்ல " என ஆலோசனை சொன்னவனை மேலும் கீழும் பார்த்தவன். " என் மச்சான் எப்பயாவது என் தங்கச்சி அது தன் உன் பெண்சாதி சம்மதம் இல்லாம கோப பட்டோ இல்ல கதைக்காமலோ இருந்து இருக்காளா " என கேட்டான் மகேந்திரன்.

 

அவன் கேள்வியில் சோர்வாய் முகத்தை வைத்து கொண்டு பெரும் மூச்சு விட்டவன் " அது தன் அடிக்கடி நடக்குமே மச்சான் ஆமா அதை என் கேக்குரிக்க " என கேக்க. பெரிதாய் சிரித்தவன் " அது சரி தன் " என்றவன் " நான் அப்பிடி கேக்க ஒரு கரணம் இருக்கு மச்சான் அப்பிடி எப்போ யாவது நீ முயச்சி செய்சு பாத்திருக்கிய " என கண்களில் குறும்புடன் கேட்டான் மகேந்திரன். அதில் திடுக்கிட்டவன் " என்ன மச்சான் உங்களையும் தங்கச்சியையும் சேத்து வைப்பம் ஏன்னு நினைச்ச  நிங்க என்னடா என்ன என்னையும் என் பெஞ்சாதியையும் பிரிச்சு வைச்சுடுவிக போல இருக்கு " என பட படத்தவன் அங்கிருந்து ஓடினான். 

 

"மச்சான் அத முயச்சி பண்ணி பாருக்க அதோட சுகமே தனி " என ஓடியவனை பார்த்து சொன்னவன். மறுபடியும் தன்னவளை பார்க்க ஆவலாய் திரும்ப அவன் முன் சரஸ்வதியுடன் கதைத்துக் கொண்டு இருந்த பாவநந்திராவின் காச்சி மெல்ல மெல்ல மறைந்து மகேந்திரனின் அறையும் மகேந்திரனின் முன் அவனின் வரைந்த படமும் இருந்தது. அந்த படத்தை தடவியவன் அந்த படத்தின் எதோ தோன்ற அருகே இருந்த ஒரு விளக்கை மறுபுறம் திருப்பினான். அந்த படம் மாட்டி இருந்த சுவர் சற்று திரும்பி அங்கு ஒரு புது பாதை உருவனது. அதனுள் கால் எடுத்து வைத்த மகேந்திரனை யாரோ பின் இருந்து அவன் தோலில் கை வைத்து தடுக்க திடுக்கிட்டு திரும்பியவன் முன் அவனை போலவே வேறு ஒருவன் கோபமாய் நின்று கொண்டு இருந்தான்.

 

" நீ என்ன இங்க வந்த இது உன்னோட இடம் இல்ல வெளியா போ " என ஆக்கிரோஷமாய் மற்றவன் கத்த திடுக்கிட்டவன். " நீ... யாரு என் நீ என்னைய மாதிரி இருக்க " என பதற்றத்தில் திக்கி திணறி கேட்டவனை முறைத்து பாத்தவன் " நான் யார? நான் யார?  முதல்ல நீ யாரு ஏன்னு நினைவு இருக்க " என கோபத்துடன் கேக்க. "நான்... நான்... " என தடுமாறியவன் கண் முன் மித்திரன் உருவமும் மகேந்திரன் உருவமும் மாறி மாறி வந்து போக அமைதியாக நின்றன். ஆனால் மற்றவன் அவன் சட்டையாய்  கொத்தாய் பிடித்து " நீ மித்திரன். நீ  எப்போவும்  மகேந்திரன் ஆக முடியாது ஆகவும் கூடாது. நீ வேறா! நான் வேறா! தேவை இல்லாம என்னோட வாழ்க்கையில நீ வராத போ இங்க இருந்து போடா.... எப்பவும் நீ இந்த அறை பக்கம் வார கூடாது போட.... போ... " என பயித்தியம் போல கத்தியவன் உருவம் ரத்த காயத் துடனும் தீக் காயத் துடனும் மாற பதறி அடித்து எழுந்தான் மித்திரன்.

 

மித்திரன் சச்சுவுடனும் சஞ்சீவுடனும் கதைத்துக் கொண்டு இருந்தவன் திடீர் என எதையோ யோசித்து கொண்டே  தன்னை மறந்து உறக்க ஆரம்பித்தான் மித்திரன். உறக்கியவன் நித்திரையில் சிரிப்பதை பாத்து " மச்சி இவனா நம்ம தூக்கத்துக்கு அப்பு வைச்சதும் இல்லாம தூக்கத்துல எப்பிடி  சிரிக்கிறான்னு பாத்திய " என குமுறினான் சஞ்சீவ். " ஏன்டா பொறுமை படுற அவன் கனவுல அச்சும் சிரிக்கட்டும் " என சச்சு மித்திரனுக்கு சார்பாய் கதைக்க சஞ்சீவ்வின் குமுறலிலோ என்னவோ பயத்தில் புலம்ப அம்ம்பித்தன் மித்திரன். நித்திரையில் கண்களில் நீரும் வார்த்தையில் கோபம் என வித்தியாசமாய்  புலம்பிக் கொண்டு இருந்தவன் பல முறையும் தட்டி எழுப்பியும் பலன் இல்லாமல் போக சஞ்சீவ் பக்கம் திரும்பியவன் " என்ன வாய்டா உன்னது " என கடு கடுத்தவன் " போடா போய் தண்ணியா கொண்டுவ " என கத்தினான். 

 

" ரொம்ப கண்ணு வைச்சிட்டமோ " என மனதுள் எண்ணியவன் தண்ணீர் உடன் வந்தான். அவனிடம் இருந்து தண்ணீரை வாங்கிய சச்சு கிளாஸ் இல் இருந்த  தண்ணீயை அவன் மீது தெளித்தான். தண்ணீர் தெளித்தும் பலன் இன்றி போக சச்சுவின் கையில் இருந்து கிளாஸ்சை பறித்தவன். " ஏன்டா அவனக்கு என்ன பன்னீரா தெளிச்சுட்டு இருக்க எட்டி ஒரு ஊத்து ஊத்துவியா அத விட்டுட்டு " என புலம்மியவன். மித்திரன் மீது ஊத்த முயச்சி செய்ய " நோ... "என வீரீட்ட படி எழுந்தான் மித்திரன். மித்திரன் திடீர் என கத்திக் கொண்டு எழும்பவும் பதட்டத்தில் அவன் மீது உத்த முயச்சி செய்ய நீரை தன் மீதே உத்தினான். அதை பாத்து " இதுக்கு நீ சும்மாவே இருந்து இருக்கலாம் " என சொன்ன சச்சு சிரிக்க மித்திரனை முறைத்த படி நின்றான் சஞ்சீவ். 

 

கனவில் இருந்து எழுந்தும் அதன் பதட்டம் குறையாது நின்றவன் சச்சு சிரித்தத்தில்  சுற்றி பார்த்தவன். தண்ணீரில் நனைந்திருந்த சஞ்சீவ் தன்னை கோபமாய் முறைப்பதை பார்த்து புரியாமல் முழிக்க ஆரம்பித்தான் மித்திரன். செய்வதையும் செய்து விட்டு திருவிழாவில் காணாமல் போனவன் போல் முழித்தவனை பார்த்த சச்சுக்கு சகித்தியா நினைவு வரா " என்னடா கெட்ட கனவடா " என அவன் தோல் மீது கை வைக்க திடுக்கிட்டு சச்சுவின் கையை தட்டி விட்டாவன் சட்டேன அவர்களிடம் இருந்து இரண்டு அடி தள்ளி நின்றான். அவன் வித்தியாசமாய் நடப்பதை பார்த்த சச்சுக்கு பகிர் என்று இருக்க சஞ்சீவ்வோ " டேய் என்னடா பண்ணுற கோஞ்சம் நிகழ் உலகத்துக்கு வாடா " என அவனை பார்த்து கத்தினான். அவனின் கத்தலில் இரண்டு நிமிடம் கண்களை வெட்டி திறந்தவன் சுய நினைவுக்கு வார சச்சுவை மேலும் கீழுமாய் பார்த்தவன் நிம்மதி பெரும் மூச்சு ஒன்றை விட்ட படி அவன் அருகே வந்து தோப்பனா அமர்ந்தான் மித்திரன்.

 

சச்சுவின் முகம் தொங்கி போய் இருப்பதை பார்த்தவன் " டேய் அப்படி முகத்தை வைச்சு இருக்காதா ரொம்ப கோவலமா இருக்கு " என அவன் கன்னத்தை கிள்ளியவன். அவன் முகம் இன்னும் தெளிவு இல்லாமல் இருப்பதை பார்த்து " டேய் கொவிக்காதடா. ரொம்ப பயக்கரமான கனவு அது தன் நீ கை வைச்சதும் பயந்துட்டன் " என சற்று கேஞ்சலுடன் சொன்னான் மித்திரன். அவன் செயலில் கோபம் தனிய " சரி விடு நீ பண்ணதுல நான் பயந்துட்டான் " என சச்சுவும் சமாதானம் ஆனான்.

 

இவர்கள் பாச மலர் போராட்டத்தை தள்ளி நின்று பார்த்த சஞ்சீவ்வோ " ஏன்டா  இவன் உன்னோட கனவுல பேய் யா வந்தன என்ன? " என கேக்க. விட்டத்தை வெறித்து பார்த்தவன் கண் முன் மகேந்திரனின் உருவம் ரத்த காயத் துடனும் தீக் காயத் துடனும் தோன்றி மறைய திடுக்கிட்டவன் " அவன் இல்ல நீ தன்டா பேய் யா வந்து பயமுறுத்தினா " என சொன்னவன் கடைக் கண்ணால் சஞ்சீவ்வை பார்க்க அவனோ புருவத்தை மேலோ உயர்த்திய படி " என் துக்கத்தை கொடுத்துட்டு நீ தூக்கினதே தப்பு இதுல நீ என்னை கலாய்க்குற உன்னக்கு உன் ரூம்ல வந்து நிக்குற என்னை காட்டையால அடிக்கணும் " என்றவன்  அங்கு இருந்து வெளியேறினான்.

 

சஞ்சீவ் வெளியே சென்றதும் கேள்வி கேக்க தயாரா இருந்தா சச்சுவின் புறம் திரும்பியவன் " no more questions. சோ முடிட்டு தூங்கு " என அவன் மீது போர்வையை விசிறியவன் மறுபுறம் திரும்பி உறங்க ஆரம்பித்தான் மித்திரன். மறுபுறம் ஷிவானி பதுங்கி பதுங்கி மல்வீரன் அறைக்குள் நுழைந்தவள் நல்ல பிள்ளை போல் உறங்கி கொண்டு இருந்த தன்னவனை கண்டதும் சுற்றி பார்த்தவள் " என்ன பல்லவி அக்கா தனக்கு ஒரு தம்பி இருக்கு என்ன இங்க யாரையும் கானம் " என மனதுள் என்னம் மிட " இப்போ நீ பல்லவியோட தம்பியை யா பாக்க வந்த?  முடிட்டு வந்த வேலையா பாரு " என அவள் மனசாச்சி அவளின் காலை வறியது. 

 

தன்னவன் அருகே வந்தவள் அவன் காதுதில் " நீ ஷிவானியா கல்யாணம் பண்ணிக்கிறிய என்னு என்னோட அண்ணா கேட்ட ஆமா ஏன்னு தன் சொல்லணும் " என உறக்கத்தில் இருந்தவன் காதில் மூன்று முறை சொன்னவள் விசியமாய் சிரித்த படி அங்கு இருந்து நகர்ந்தாள் ஷிவானியா. அவள் வந்தது முதல் போனது வரை குளியல் அறையில் இருந்து பார்த்த பர்வதன் " இவனுக்கு முழிச்சுட்டு இருக்கும் பொது சொன்னாலே செய்ய மாட்டன் இந்த பொண்ணு என்ன என்ன தூக்கத்தில இர்ருக்குறவன் காதுல பிள்ளைக்கு பேரு வைக்குற மாதிரி முன்னு முறை சொல்லிட்டு போகுது " என வெளியே புலம்பியவான். தன் இடத்தில் வந்து படுத்துக் கொண்டான். 

 

உறக்கத்தில் வந்த கனவு மித்திரனின் உறக்கத்தை பறித்து இருக்க அவன் மணமோ " ஒரு சின்ன கனவுக்கே என்னால நிஜாம் எது கனவு ஏதுன்னு கண்டு பிடிக்க முடியல! நம்ம பல்லவி எப்பிடித்தான் இத தங்குரலோ " என தன்னவள் மீது பரிவை ஏற்படுத்த அவளை நினைத்த படியே உறங்கி போனான் மித்திரன்.

 

மூச்சு விட சிரமப் பட்டு கொண்டு இருந்த பல்லவிக்கு சற்று சுவாசம் கிடைக்க மெல்ல மெல்ல சிறிதாய் கண்களை திறந்தவள்  அருகே நின்ற ஒரு உருவம் அவள் காதுகளில் " அவன் உனக்கா எவ்வளவு கவலைப் படுறான் ஏன்னு தெரியுமா? அவன் உன்னை எம்புட்டு கொடுமை படுத்தி இருப்பன் அவனுக்கு நீ சொத்துப் போய் தண்டனை கொடு " என பயித்தியம் போல கத்திக் கொண்டே அவளின் வாயில் எதையோ ஊற்றினான். அவனை தடுக்கும் எண்ணம் மனதில் எழுந்த போதும் உடம்பில் தேன்பு இன்றி போக அமைதியாய் கண்களை முடிக் கொண்டாள் பல்லவி. 

 

திடீர் என தன்னை சுற்றி பயங்கர வெப்பம் உணர மீண்டும் சுய நினைவுக்கு வந்த பல்லவி சிறிதாய் கண்களை திறந்து சுற்றி பார்க்க அந்த இடம் முழுதும் தீயில் எரிந்து கொண்டு இருந்தது. " தன்னை யாராவது காப்பற்ற மாட்டார்கள் " என அவள் மனது தாவிக்கும் போதே தொலைவில் இருந்து வந்த ஒருவன் அவள் அருகே நெருங்க மீண்டும் தான் நினைவுகளை இழந்தாள். நெஞ்சும் வயிறும் பயக்கரமாய் எறிய ஆரம்பிக்க அவள் காதுகளில் மீண்டும் ஒரு குரல் " எனக்கு உன் கிட்ட நிறைய பேசணும் டி அனா எல்லாம் கை மீறி போச்சுலா கடைசி வரை உனக்கு நான் சந்தோசத்தை தரவே இல்ல " என உருக்கமாய் கேட்ட அந்த குரலின் சொந்தகரணை பார்க்க கடினப்பட்டு கண்களைத் திறந்தவள் முன் அவளின் கையை  தன் கைகளுக்குள் வைத்து கண்களை மூடி அழுத்து கொண்டு இருந்தான் மித்திரன்.

 

தனக்கு எதுவும் இல்லை என அவருக்கு தெரிய படுத்த அவள் மனம் தவிக்க அதற்கு அவள் உடம்பு அதற்க்கு ஒத்துழைக்க மறுத்தது. " இப்பவும் ஒன்னும் கேட்டு போகல நான் இப்பவே உன்ன அங்க கூட்டிடு போறான் " என சொன்ன மித்திரன் அவளை தூக்கி கொண்டு அங்கு இருந்து வெளியேறினான். அதன் பின் பல்லவிக்கு மறுபடியும் சுய நினைவு வரும் போது அவள் தாத்தாவின் வீட்டின் உள் அவளை தூக்கி கொண்டு சென்றான் மித்திரன். அதன் பின் என்ன நடந்தது என புரியாமல் மொத்த இடமும் கருப்பாய் இருக்க தான் உருவத்தையோ கண்ணாடியில் பாத்தவள் அதன் அருகே சொல்ல " எனக்கா இந்த வீட்டில எனக்கு ஏதோ காட்ட யாரோ என்னை இங்க கூட்டிடு வந்தரு அவர் யாருன்னு எனக்கு தெரியலா அனா அவர் கண்ணுல ஒரு காதலும் வலியும் பாத்தன் அப்படி அவர் என்கிட்ட என்ன காட்ட கூட்டி வந்தாரு தயவு செய்து அத மட்டும் கண்டு பிடி  அது இங்க தான் எங்கையோ இருக்கு " என அவள் விம்பம் அவளிடம் கேட்பது போல பிரமைபல்லவிக்கு  தோன்றியது.

 

அப்போது " பல்லவி.... பல்லவி .... " என சகித்தியாவின் குரலும் கீதாஞ்சலியின் குரலும் மாறி மாறி கேக்க எங்கு இருந்து குரல் வருகிறது என புரியாமல் அவள் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. அப்போது மித்திரன் அவள் முன் சற்று வித்தியாசமான உடையுடன் நடந்து வந்து அவள் கையை பிடித்தவன் அந்த அறை கதவை திறந்து விட அங்கு இருந்து வெளியறியவள் கூசும் வெளிச்சத்தில் தன் கண்களை மூடிக் கொண்டாள் பல்லவி. அப்போது அவள் கைகளை பிடித்த படி  "பல்லவி இங்க பாரு கண்னை திறந்து பாரு " என்ற குரல் அவள் காதின் அருகே கேக்க. மெல்ல கண்களை திறந்தவள் " அம்மா " என பயத்தில் வீறிட்டு கத்தினாள்.

 

தொடரும்...