webnovel

புதுவித உணர்வு

மறுபுறம் பவாநந்திராவை அறைக்கு அழைத்து வந்தவள் அவள் உடையை ஒரு பெட்டியில் அடுக்கி அவளை நல்ல சேலை அணிய வைத்தாள். பின் அவள் பெட்டியை எடுத்து வந்து மகேந்திரன் காரில் வைத்து விட்டு பவாநந்திராவை உள்ளே அமர வைத்து விட்டு " நீ எனக்காக தானே இவள கட்டிக்கிட்ட இப்ப எனக்காக இவள ஊருக்கு கூட்டிட்டு போ இது எனக்கு நீ செய்யுற உதவி " என கடுகடுத்தவள் வீட்டிற்குள் வந்து கதவை அடைத்தாள்.

பதறி அடித்து கதவை திறக்க வந்த வீராவின் கைகளை பிடித்து " நீங்க கதவ திறக்காதீங்க மாமா இது என் மேல சத்தியம் "என்று கூறி விட்டு வேகமாகச் சென்று தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

Flashback End

பல்லவி மயக்கத்தில் உளரிக் கொண்டு இருக்க அவள் கண்களில் கண்ணீர் அனுமதி இன்றி ஓடிக் கொண்டிருந்தது. " என்னாச்சு தாத்தா? ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க? " என வந்து நின்றாள். பல்லவியின் தோழியும் அவளின் தந்தையின் அண்ணன் மகளுமான கீத்தாஞ்சாலி.

கீத்தா பிறந்த போதே தன் தாயை இழந்தவள். அவளின் தந்தை அவள் வயிற்றில் இருக்கும் போதே கார் விபத்தில் இறந்து விட்டார். குடும்பத்தை பொறுத்த வரை அவள் பல்லவி மற்றும் பர்வதனுடன் இணைந்து பிறக்காத சகோதரி ஏனெனில் மூவரின் பிறந்தநாளும் ஒரே நாள் தான் என்பதால். அத்துடன் அவளும் கூட பல்லவியின் தாய் தந்தையை தன் தாய் தந்தை என எண்ணுகின்றாள். அவர்களும் அப்படி தான். திடீர் என கீத்தாவின் குரல் கேட்டதும் பர்வதனுக்கு சந்தோசம் எட்டிப்பார்க்க பல்லவி அருகிலேயே இருந்தவன் ஓடிப்போய் அவளை அணைத்துக் கொண்டான்.

அப்போது தான் பல்லவியை மயங்கிய நிலையில் கண்டதும் " என்னா ஆச்சு இவளுக்கு " என பதற்றமாய் கீத்தா கேட்க " அவளுக்கு என்ன ஆச்சுன்னே புரியுதில்ல கீத்து நீ கனடாக்கு வேலைக்கு போன காெஞ்ச நாளிலேயே இவ லூசு மாதிரி கனவில உளர ஆரம்பிச்சான்னு சொன்னான் எல்லோ! அதுக்கு பிறகு நீ அவ கூட கோல் பன்னி கதைச்சதும் அவ நோர்மலா இருந்தா ஆனா இங்க வந்த நேரம் தொடக்கம் அவ ரொம்ப டிஸ்ரப் ஆக ஆரம்பிச்சிட்டா " என ஒரு மூச்சில் அனைத்தையும் கூறி முடித்தான்.

பல்லவி அருகே வந்தவள் அவளின் நிலையை பரிசோதித்த பின் " ஆமா பவன் இவ ரொம்ப டிஸ்ரப்பா இருக்குறா அவ எதையாச்சும் பாத்து பயந்தாலா என்ன? " என கீத்தா கேட்க. " ஆமா அவளுக்கு இந்த வீட்ட வர பிடிக்கவே இல்ல ரொம்ப பயந்தா ஏன் ஓடிக் கூட போனா அப்புறம் என்ன நடந்திச்சுன்னு தெரியல அவ ஒன்னும் சொல்லாம உள்ள வந்தா. அப்புறம் தாத்தா பாட்டி காெஞ்சம் கோபமா கதைச்சதும் கோபமா படிக்கட்டில ஏறினவ ஒரு மாதிரி நடந்துக்கிட்டு மயங்கி விழுந்துட்டா " என நடந்ததை பர்வதன் கூறி முடித்தான்.

கீத்தா உளவியல் மருத்துவர் என்பதால் அவளுக்கு பல்லவியின் நிலை காெஞ்சம் புரிந்தது. " பல்லவி காெஞ்சம் அமைதியா ஓய்வெடுக்கட்டும் " என கூறி அனைவரையும் அவள் அறையில் இருந்து வெளியே அழைத்து வந்தவள். சற்று அமைதியாய் யோசிக்க மற்றவர்கள் புரியாது பல்லவிக்கு என்ன ஆனது என பர்வதனை பிய்த்து எடுக்க ஆரம்பித்தனர். பெரும்மூச்சு ஒன்றை இழுத்து நிமிர்ந்தவள் மித்திரனை கண்டதும் சற்று ஆச்சரியமாய் " நீங்க மித்திரன் தானே? " என கேட்க. " ஆமா " என தலையாட்டியவன் " நீங்க இங்க எப்பிடி? " என யோசித்த படி கேட்டவள் அவன் பதில் கூறும் முன் பவன் என அழைத்தாள் " பல்லவி எப்ப ரொம்ப வித்தியசமா நடந்துக்கிட்டா? " என கேட்க.

" அது மற்ற வீட்டில இருந்து வெளிக்கிடும் போதே தூக்கத்தில அழுது இருந்தா, அப்புறம் பஸ்சில கனவு கண்டுட்டு ஓடுற பஸ்சில இருந்து இறங்க போயிட்ட, என இழுத்தவன் சகியின் புறம் திரும்பி விராட் அண்ணாவ பாத்து ரொம்ப வித்தியசமா உளரினா, தன்னோட கனவுல வந்தவர் மாதிரியே இருக்காருன்னு " என கூறியவனுக்கு அப்போது தான் அவள் வரைந்த கொப்பியின் நினைவு வர ஓடிச் சென்று அதை எடுத்து வந்தான் அதை கீத்தாவிடம் கொடுத்தான்.

" என்னா இது? " என கீத்தா கேட்க. " பல்லவி தன் கனவுல வார எல்லாத்தையும் வரைஞ்சிருக்கா " என கொடுக்க. அதில் அதிர்ச்சியடைந்த கீத்தா " எதுக்காக இவ இப்பிடி பன்றா? " என பொறுமையாக கேட்டாள்.

" நான் தான் வரைய சொன்னன் " என சாகித்தியா கூற. " ஏய் சாகித்தி நீயும் ஒரு சைக்கோலொயி டாக்டர் தானே அப்புறம் ஏன் இப்பிடி பன்ன? " என கீத்தா கேட்க. அவள் விசித்திரமா நடந்துக்க ஆரம்பிச்சிட்டாள் தூக்கத்துல அழுறாள் சில நேரம் மூச்சு தினறி மயங்கி விழுந்திடுவள். அப்புறம் என்னை மட்டுமே காெஞ்ச நாள் ஏன் ஒரு நிமிசம் கூட விடல அதால தான் நான் கொஞ்சம் அவ மைன் ரிலாஸ் பன்னி அவளா என்னத்தா கனவுலா பாக்குறாலோ அத வரைய சென்னான். அதுக்கு அப்புறம் தான் அவ பழைய மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சாள். நான் இத பர்வதன் கிட்ட சொல்ல அவள் விடல " என நடந்ததை சகி கூறி முடித்தாள்.

அதைக் கேட்டதும் பர்வதன் அதிர்ந்து போய் நிற்க கீத்தா யோசனையுடன் அந்த புத்தகத்தை விரித்தாள். அதில் சகியினதும் சச்சுவினதும் உருவம் வரைந்திருந்தது. அடுத்த பக்கத்தில் முழுமை பெறதா ஒரு ஆணின் உருவம் மறுபக்கம் இப்போது அவர்கள் இருக்கும் வீட்டின் படமும் இருக்க அதை சட்டென மூடியவள். " அப்போ அவ தன் கனவுலா பாக்குறா எல்லாம் அவ நிஜ வாழ்கையிலையும் பார்க்க ஆரம்பிச்சிருக்கு அது தான் அவள் அப்பிடி நடந்நதுக்கிறாள் " என யோசனையுடன் நிமிர்ந்தவள். மித்திரனை கண்டதும் " நான் உங்களை மறந்துட்டன் ஆமா இப்ப உங்க உடம்பு எப்படி இருக்கு எல்லாம் ஓகே தானே " என மித்திரனிடம் கேட்க.

" ம்.. எனக்கு இப்ப ஓகே தான் தாங்ஸ் அன்டைக்கு என்னை காப்பத்தினத்துக்கு " என மித்திரன் மென்மையாய் சிரித்தான். " தாங்ஸ் எல்லாம் வேனாங்க அதோட அன்னைக்கு நான் உங்கள காப்பாத்தல பல்லவி தான் காப்பாத்தின " என கீத்தா கூறி முடிக்க முன்பே " என்ன?.... " என்று அதிர்ந்த குரல்கள் விக்கிரம், சச்சு, மற்றும் மித்திரனிடம் இருந்து ஓரே நேரத்தில் வந்தது.

அப்போது தான் வெளியே சென்றிருந்த சஞ்சீவ் உள்ளே வரவும் இவர்களின் கத்தும் சத்தத்தில் பயந்து " ஏன்டா கேட்க கூடாதது கேட்ட மாதிரி கத்துறிங்க " என காதில் விரலை வைத்து தேய்த்தான். " அண்ணா மித்திரன் அண்ணாவ அன்டைக்கு காப்பத்தினது பல்லவியாம் அது தான் " என இன்னும் அதிர்ச்சி குறையாமல் விக்கிரம் கூற " ஓ அப்பிடியா? " என சாதரணமாய் கேட்டவன்.

" என்ன?... " முழுமையாய் புரிந்தவன் போல் அதிர்ந்தவனுக்கு அப்போது மித்திரன் சொன்ன விளக்கம் " அவ குரல் ரொம்ப மென்மையா இருக்கும், அவகதைக்குறத கேட்க கேட்டிட்டு இருக்கனும் போல இருக்கும். ஆனா இவ கோவக்காரி, அதிகாரமா கதைக்குறா போதக் குறைக்கு இவகதைச்சா இந்த பஸ்ச விட்டு குதிச்சு ஓடனும் போல இருக்கும் " என கதைத்தது நினைவு வர " மச்சான் இப்பிடி ஏமாந்திட்டியே " என உணர்ச்சி வசப்பட்டு கத்தினான். " என்னாச்சு எதுக்கு இப்ப நடுவீட்டிலா நின்னு ஒவ்வருத்தரா கத்திட்டு இருக்கீங்க " என சற்று எரிச்சலுடன் கேட்டபடி மாடிப்படி கட்டிலில் இருந்து இறங்கி வந்தாள் பல்லவி.

பல்லவியை கண்டதும் கீத்தா அவளை அனைத்துக் கொண்டாள். கீத்தாவை அங்கு எதிர் பார்க்காததால் " நீ எப்போ வந்த கீத்து " என பல்லவி கேட்ட சஞ்சீவ்வோ இருவரையும் பார்த்து திரு திருவேன முழிக்க ஆரம்பித்தான். " இப்போ தான் வந்தனான் " என கீத்தா கூறி முடிக்கும் முன் " இந்தாம்மா நீ அவளா அப்புறம் நலன் விசாரி இப்ப இந்த இந்த சூக்குக்காப்பிய குடி அப்ப தான் தென்பா இருக்கும் " என ஜெயலச்சுமி பாட்டி கையில் சூக்கு காப்பியுடன் வர பல்லவி " இதோ உன்னோட ஆசை பாட்டி உனக்காக காப்பி போட்டு எடுத்துட்டு வந்திருங்காங்க போ போய் குடி " என முனு முனுத்தபடி நகர்ந்தாள் பல்லவி. ஆனால் பாட்டியோ கீத்தாவை கண்டு கொள்ளாது பல்லவி கையில் கப்பை கொடுக்க இம்முறை பல்லவி திரு திருவேன முழிக்க ஆரம்பித்தாள்.

" பாட்டிக்கு கண்ணுல ஏதும் பிரச்சனையா பல்லவி கையிலா காப்பிய குடுத்துட்டு போறாங்க " என சகி பர்வதனை கேட்க " அதே சந்தேகம் தான் எனக்கும் ஆனா பல்லவி முழிய பாத்தியா திருவிழால காணம போன பாப்பா மாதிரியே முழிக்கிறா " என கூறி பர்வதன் சிரித்தான். " டேய் என்டா அங்க சிரிப்பு அவ உனக்கு அக்கா தானே உடம்பு முடியாம இருக்குறா! போ போய் அவள வெளில இருக்குற தோட்டத்துல கொஞ்சம் காற்று வாங்க வை " என தாத்தா கத்தவும் பல்லவி சட்டென கீத்தாவின் கையை பிடித்தவள் " யம்மா எனக்கு ஓரே மயக்கமா வருது என்னடி அச்சு உன் தாத்தா பாட்டிக்கு எப்பவும் நீ, பர்வதன், மல்வீரன் மூன்னு பேரும் தானே கண்ணுக்கு தெரிவிங்க இதுல நான் எப்பிடி அவங்க கண்ணுல தீடிர் என்னு தெரியுறன் " என கீத்தாவுக்கு மட்டும் குரலில் கூறி தலை உழுக்கினாள்.

மறுபுறம் மித்திரன் கண்கள் பல்லவியையே பார்த்து நிற்க அவன் என்னமோ " ரொம்ப மென்மையான குரல் கேட்க கேட்கலாம் போல இருந்திச்சு அந்த குரல் பல்லவியோடது தானா? அப்ப! என் இப்ப இப்படி கதைக்குறா? புரியுது இல்லையே " என குழம்பியவனை சச்சு உழுக்க. திரும்பி அவனை பார்த்தவன் அன்னைக்கு " நான் கேட்டது உண்மைன்னா இன்னைக்கு கேட்குறது பொய்யா? இல்ல இன்னைக்கு நான் பாக்குறது உண்மைன்னா அன்னைக்கு நான் கேட்டது பொய்யா? " என அவனிடம் கேட்டு விட்டு தன் பாட்டில் சென்றான்.

புலம்பிய படி செல்பவனை பார்த்து " அய்யோ பாவம் பைத்தியம் ஆயிட்டான் " என சச்சு தோலை உழுக்கிய படி திரும்ப சஞ்சீவ்வோ கீத்தாவை கண்கள் வெட்டாது பார்த்து நின்றான். அதை பார்த்ததும் " டேய்! என்னடா பன்னுறா " என சற்று மிரட்டும் தொனியில் கேட்க அவனோ " அய்யோ எனக்கு இந்த பெண்ணு யாருன்னே தெரியாது " என சட்டென கத்தினான். சஞ்சீவ் கத்திய சத்ததில் திரும்பிய கீத்தா அவனை கண்டதும் திடுக்கிட்டு நிற்க. பாட்டியும் தாத்தாவும் " தம்பி நீங்க இங்க என்ன பன்னுறிங்க உங்க ரூம் சாவி வாங்க வந்திங்களா " என கேட்டனார்.

" எதுக்கு பாட்டிம்மா இந்த தடி மாட்டுக்கு ரூம் சாவி " என சச்சு புரியாது கேட்க " அப்பிடி பேசாதீங்க அப்பு இந்த தம்பி தான் இந்த வீட்டை விலைக்கு வாங்கியிருக்காங்க " என தாத்தா கூறினார். அதை கேட்டதும் " இது எப்போட என அவன் குடும்பம் அவனை பார்க்க! அவனே... அப்பிடி பார்க்காதீங்க குடும்பமே இத வாங்கினது நான் கிடையாது உங்க மூத்த வாரிசு மித்து பையா தான் இந்த வீட்ட பார்த்து அவனுக்கு ரொம்ப காலம் இந்த வீட்ட இருந்த மாதிரி பில் ஆகுதுன்னு ஒற்ற காலில நின்னு வாங்கினான் நம்பல என்டா நீங்களே கேளுங்க " என தன்னுடைய போன் எடுக்க வந்த மித்திரனை கை காட்டி விட்டு அமைதியானான்.

அனைவர் பார்வையும் அவன் புறம் செல்ல அவனே " இல்லையே! நான் இரண்டு காலுல அதுவும் சொந்த காலுல நின்னு தான் இந்த வீட்ட வாங்கினான் அப்போ எனக்கு இது இவங்க வீடு என்னு தெரியாது " என சலனமே இல்லாமல் கூறியவன் பார்வை பல்லவி பக்கம் சென்றது. மித்திரன் பார்வை தன் மீது நிலைக்கவும் அவள் கண்கள் தன்னால் கலங்க ஆரம்பித்தது. பல்லவி கண்கள் கலங்குவதை கண்டதும் ஒரு நொடியில் அவனை நெருங்கியவன் கைகள் தன்னால் அவள் கண்ணீரை துடைக்க அங்கு பெரும் அமைதி நிலவியது. மொத்த குடும்பமும் வாய் அடைத்து நிற்க இருவரின் நெருக்கத்தை பார்த்ததும் பர்வதனுக்கு விக்க ஆரம்பித்தது.

அந்த சத்ததில் இருவரும் தன்னிலை அடைய " எதுங்குங்க அழுறிங்க உங்களுக்கு இந்த வீடுன்னா அப்பிடி பிடிக்குமா என்னா? " என மித்திரன் நிலமையை மாற்ற கேலியாய் பல்லவியிடம் கேட்டான். " ஏது மறுபடியுமா? " என சற்று எங்கியவள் தன் கன்னத்தை தொட்டுப் பார்க்க அவள் அழுதது புரிந்திருந்தது. மெல்ல திரும்பி சகியையும் கீத்தாவையும் பார்த்தவள். " நான் உங்க இரண்டு பேர் கூட பேசனும் வாங்க போலாம் " என இருவரின் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள் பல்லவி.

தொடரும்...