webnovel

கைகள் கோர்க்கும் ஒரு நொடி

மார்ச் 1,2019

ஜனனி : சரி உன்ன பத்தி சொல்லு

வெற்றி : என்ன பத்தி என்ன சொல்ல வீட்டுக்கு ஒரே பையன் ஐயா கூட இருக்காங்க.

ஜனனி : அப்பா அம்மா எல்லாம்

வெற்றி : சின்ன வயசுலயே அம்மா இல்ல : கொஞ்ச நாள் முன்னாடி அப்பாவும் இல்ல.

ஜனனி : மன்னிச்சிக்கோ டா

வெற்றி : பரவலாக பாங்கு.

ஜனனி : பிரண்ட்ஸ் யாரும் இல்லையா

வெற்றி : இருந்தாங்க அப்பா போன அப்புறம் யாரு கிட்டயும் பேச பிடிக்கல பயமா இருந்துச்சு இவங்களும் போய்டுவாங்க லோனு.

ஜனனி : லூசா நீ

வெற்றி : கொஞ்சம்

ஜனனி : பைத்தியம்

வெற்றி : இட்ஸ் மீ, சரி உன்ன பத்தி சொல்லு

ஜனனி : என் முழு பேரு ஜனனி ராம்குமார் . பிபிஏ ஸ்டூடண்ட்.உன்ன போல அம்மா இல்ல ஆனா அப்பா இருக்காரு. எனக்கு அவருதான் உலகம் அவருக்கு நான்தான் உலகம்.

வெற்றி : செம்ம லா

ஜனனி : சரி நான் இப்போ தேவாலயம் (church) போயிட்டு வீட்டுக்கு போவேன் நீ வாரிய இல்ல இந்து அதனால வரமாட்டேன் அப்படி ஏதாவது.

வெற்றி : அம்மா போ அப்போ சாமியே இல்லானு நினைச்சன் ஆனா அப்பா போற அப்போ சொன்ன வார்த்தை "இந்த உலகத்துல உனக்கு யாரும் இல்லன்னு மட்டும் நினைச்சிடாத. அந்த கடவுள் மட்டும் தான் உனக்கு இனிமே உனக்கு". அப்புறம் எப்போ லா சாமிய பிரார்த்தனை பண்றனோ அப்போ எல்லாம் என் அப்பா என்கூட இருக்க மாதிரி இருக்கும். சோ எனக்கு மதம் ஒரு பொருட்டே கிடையாது.

வெற்றி ஜனனி இருவரும் church க்கு ஒன்னா போனாங்க.

இன்று

மண்டபம் க்கு இருவரும் வந்தாங்க. கல்யாணத்தில் கூட்டமே இல்ல வெற்றி ஐயர் க்கு உதவிடு இருந்தா அவர் கேட்கிற பொருள் எல்லாம் எடுத்து கொடுக்கிறது தயிர் ரா சமையல் ஆளு கிட்ட இருந்து வாங்கி கொடுக்கிறது.

அப்புறம் ஜனனி தனியா இருக்கானு போயிட்டு அவ கிட்ட பேசிட்டு இருந்தேன்.

ஜனனி : வெற்றி எனக்கு ஒன்னு தான் புரிய

வெற்றி : உனக்கு ஒன்னும் புரியலையா இல்ல ஒன்னு புரியலையா.

ஜனனி : ஒன்னு

வெற்றி : என்னது

பிப்ரவரி 6

விஷ்ணு அம்மா : தங்கோ உன்கிட்ட எப்படி கேக்குறதுன்னு தெரியல

வெற்றி : என்னது மா சொல்லுங்க ஒரு பிரச்சனையும் இல்லை எனக்கு.

அம்மா : ஒன்னு இல்ல தங்கோ லாக்டவுனால் கல்யாணம் எளிமையாக பண்ணலானு நினைச்சோம் அதன் இப்போ லாக்டோன் இல்ல அதனால அப்பா ….

வெற்றி : சொல்லுங்க அம்மா

அப்பா : அது இல்லப்பா இப்ப பேனர் போஸ்டர் லா அடிச்சு ஊரு முழுக்க ஒட்டலாம் இருக்கான் . பாப்பா சொன்ன உனக்கு அத பத்தி நல்ல தெரியும் னு அதன் போய் பேனர் போஸ்டர் க்கு சொல்லிட்டு வரலாம்.

வெற்றி : அதுக்கு என்ன பா வாங்க போலாம்.

வெற்றி வர அப்போ அவன் லேப்டாப் பையும் கொண்டு வந்தான்.சோ டிசைன் க்கு வெற்றி உதவுன டிசைன் எல்லார்க்கும் பிடிச்சதும். வெற்றி விஷ்ணு அப்பா போய்டு பேனர் போஸ்டர் க்கு சொல்லிட்டு வந்தாங்க.

அந்த நாள் மாலை லா விஷ்ணு அப்பா அம்மா சேந்து வெற்றி யா கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும் அப்படி பத்திரிகை வைச்சாங்க.

கொஞ்ச நேரம் கழிச்சு விஷ்ணு கூட வெற்றி பேசுற பா

விஷ்ணு : வெற்றி நீ என் கல்யாணத்துக்கு வர வேண்டாம். அப்புறம் நீ ரொம்ப பீல் பண்ணுவ.

இன்று

ஜனனி : விஷ்ணு உன்ன கல்யாணத்துக்கு வர வேண்டாம் னு சொல்லியும் நீ என் வந்த னு.

வெற்றி : அவ என் கூட இருந்தாலும் இல்லனாலும் அவ சந்தோஷமா இருந்தா போதும். இன்னைக்கு அவ வாழ்கை லா முக்கியமாக நாள் நா இல்லாம எப்படி .

ஜனனி : உனக்கு வலிக்குமா இல்லையா.

வெற்றி : வலி உள்ளே இருக்கும்.

ஜனனி : மைர இருக்கு

வெற்றி : என்ன இப்படி பேசுற

ஜனனி : அப்புறம் என்ன வெறுப்பு காட்டிகிட்டு

வெற்றி : சரி விடு கல்யாணத்த பாக்கலாம்.

பிப்ரவரி 13 : மாலை நேரம்

சென்னை அருகே ஒரு காடு பகுதி.அங்கு ஒருவன் பெயர் நீலகண்டன் பாம்பு விஷம் விற்பனை செய்பவர் தனது வீட்டில் வைத்து.

வெற்றி அவரிடம் ஒரு பாட்டில் ஒரு புதுவகை பாம்பின் விஷம் வாங்கினான்.