பெரியவர்கள் முன்னிலையில் இரு குடும்பமும் தட்டங்கள் கை மற்றிக் கொண்டு சகித்தியாவுக்கும் விராட்டிற்கும் நிச்சாயாதர்த்தம் செய்து முடித்துனார். மறுநாள் திருமணம் என நிச்சியதார்த ஓலையும் படித்து முடிக்க அங்கு வேலைகள் பரபரப்பாய் நடந்நது.
இதற்கு இடையில் மித்திரன் பெரியவர்கள் இருவரும் கைவிட்ட அந்த பகுதியை புதுப்பித்து சுத்தம் செய்யும் போது ஓரே உருவத்தில் இருக்கும் அவர்கள் யார் அவர்களின் நினைவுகள் எதனால் பல்லவியை தொல்லை செய்கின்றன என்ற தேடலுக்கு விடை கிடைக்க அதில் அவனுக்கு ஓரு வித வெற்றியும் அதிர்ச்சியும் காத்திருந்ததும். முதலில் இருந்தே அவர்கள் பல்லவியின் உறவினர் தான் என்பதில் சந்தேகம் இருந்து சிறியவர்கள் அனைவருக்கும் ஆனால் அவர்களின் வாழ்கையின் கடைசி நிமிடங்கள் அவன் எதிர் பார்க்காத ஓன்றாய் இருந்தது.
தான் தேடி கண்டுபிடித்ததை பற்றி சகித்தியாவிடமும் பர்வதனிமும் கூற அவர்களும் ஏதோ முடிவு செய்தவராய் " அப்ப நாம அவளுக்கு நாம பிளான் பன்ன மாதிரியே உங்க இரண்டு பேருக்கும் கல்யாணத்தை பன்னி வைச்சிட வேண்டியது தான் என்ன இப்பிடி தான் இவங்க கதையோட கடைசி இருக்கும் என்னு நான் கொஞ்சமும் ஏதிர்பாக்கலா " என பர்வதன் உறுதியாய் கூறினான்.
அதற்க்கு மித்திரன் " அப்பிடி மட்டும் நான் பன்னா வீட்டாலுங்க கட்டையலா அடிப்பங்கடா! அதிலையும் உங்க அக்கா என்னைய கொலையே பன்னிடுவா! அதுனால முதல்ல சகி கல்யாணம் நாளைக்கு நல்ல படியா நடக்கட்டும். அதோட என் தாத்தாவும் என்னோட சித்தப்பாவும் நாளைக்கு வாரங்க சோ நாம சிறப்ப நாளைக்கு முடிவு எடுப்பம் இப்ப போங்க போய் துங்குங்க " என அனைவரையும் துரத்தியவன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
" டேய் பார்த்து போடா இந்த இருட்டில போறத்துக்கு நாம நேற்று வெளிக்கிட்டு இருக்கலாம் என்னோட செல்ல பேரன் கல்யாணத்துக்கு என்னை அந்த நேரத்துக்கு கூட்டிடு போறியேடா நீ எல்லாம் திருந்தவே மாட்டா " என காரை ஓடிக் கொண்டிருந்த ஜீவனந்தனை அவனின் தந்தை சத்தியாமூர்த்தி திட்டிக் கொண்டே வந்தார். ஜீவனந்தனோ அதை தன் காதில் போடமல் காரை அந்த பெரிய வீட்டின் முன் நிறுத்தினான்.
கார் நின்றது தன் பேரனை பார்க்கும் ஆவலில் அடித்து பிடித்து இறங்கியவர் முன் வேட்டி சட்டையுடன் கம்பீராமாய் இறங்கி வந்தான் மித்திரன். மித்திரனை பார்த்ததும் சற்று அதிர்ச்சியுடன் பார்த்தவர் கண்களுக்கு மகேந்திரன் உருவம் வந்து போக அவனை ஓடி சென்று அனைத்தவர். " பாக்க மகேஸ் மாதிரியே இருக்கடா " என அவனை ஆராத்தலுவியவர். அந்த வீட்டை கண்களால் துலாவி விட்டு " டேய் பேரான்டி எதுக்குடா இந்த வீட்டில அந்த சச்சு பயலுக்கு கல்யாணம் நடக்குது " என சற்று பதற்றமாய் கேட்டார்.
" எதுக்குத் தாத்தா இப்ப பதறுறீங்க இது தான் சகித்தியாவோட பரம்மரை வீடு. இங்க தான் கல்யாணம் செய்யனும் என்னு சொல்லி சகி தான் ஆசைப்பட்டா! அதோட இன்னொரு சப்பிரைஸ் இந்த வீட்டை தான் தாத்தா நான் விலைக்கு வாங்கியிருக்கன் " எனக் கூறவும் அதிர்ச்சியாய் அவனை பார்த்தவர். " என் ராசா உனக்கு வேற வீடு கிடைக்கலையா? இந்த வீட்டப் போய் வாங்கியிருக்க " நடுக்கமாய் அவர் குரல் வர அவருக்கு வியர்க்க ஆரம்பித்தது.
இதற்க்கு இடையே மித்திரன் என அழைத்த படி பர்வதன் அங்கு வரா அவனை கண்டதும் தன் தாத்தாவையும் சிறிய தந்தையையும் அறிமுகம் செய்து வைத்தவன் பர்வதனையும் அறிமுகம் செய்தான். பர்வதன் முகம் முழுதும் புன்னகையுடன் அவர்களை அழைக்க அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்.
அவர்கள் உள்ளே வரும் போது சச்சுவிற்க்கு தலையில் பால் ஆறுகு வைக்கும் சடங்கு நடந்து கொண்டிருந்தது. அதை கண் குளிர பார்த்தவர் அவனுக்கு தன் கைகளால் பால் ஆறுகு வைத்த பின் அவன் காதில் " எப்படியோ மூன்று வருடமா காதலிச்சு வீட்டுக்கு தெரியமா அதே பெண்ணா அரேஞ்ச் மேரேஜ் பன்னிக்க போற அதுக்கு என்னோட வாழ்த்துக்கள் பேரான்டி " என வாழ்த்து தெரிவிக்க சற்று பதற்றமாய் சுற்றி முற்றி பார்த்தவன் " தாங்ஸ் தாத்தா " என புண்ணகை செய்தான்.
" அதுலாம் இருக்கட்டும் இப்ப யாவது பெண்ணா கண்ணுலா காட்டுவியா " என கேட்டு சிரிக்க " தாத்தா " என சற்று வெட்க்கத்துடன் உறுமியவன். " எப்பிடியும் பார்க்கத்தானே போறிங்க அதுவரைக்கும் இந்த ரகசியம் வெளில கசியக் கூடாது " என கண்டித்தான். அதற்க்கு அவரும் சிரித்த படியே அங்கிருந்து நகர்ந்தார்.
நிமிடங்கள் வேகமாய் நகர பல்லவி தன் வித்தை மொத்தமும் இறக்கி சகித்தியாவை மணமகளாய் அலங்காரம் செய்து முடிக்க அவளை அவளை அழைந்துக் கொண்டு மணமேடை நோக்கி சென்றார்கள். சகித்தியாவை கண்டதும் தாத்தா அதிர்ந்து போய்யிருந்தார் அவரின் நினைவுகள் இறந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் முடிச்சிடா ஆரம்பித்தது. இதற்கு இடையே அவரின் கலக்கத்தை பெரிதாக்குவது போல் பல்லவி வேறு அங்கு வந்து சேர்ந்தாள். திருமணம் நல்ல முறையில் நடந்து முடிய சச்சுவும் சகித்தியாவும் தம்பதி சகிதமாய் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.
அவர்கள் அனைவர் காலிலும் விழுந்து முடித்ததும் பெரியவர்கள் அனைவரையும் ஓன்றாக நிற்க வைத்த மித்திரன் " நான் கேட்குறன்னு தப்பா எடுத்துக் காதைங்க சத்தியமா சொல்லுறன் எனக்கு உங்க வீட்டுப் பெண்ணு பல்லவியா ரொம்ப பிடிச்சிருக்கு அவளா தான் கல்யாணம் செய்யனும் என்னு ஆசைப்படுறான் " என மொத்த குடும்பத்தின் காலில் ஓரே நேரத்தில் விழ அவர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் நிற்க மித்திரனின் தந்தை " அட நாங்களே இதா தன் எப்பிடி தொடங்குறது என்னு தெரியமா முழிச்சுட்டு இருந்தம் என்ன சம்மந்தி உங்க பெண்ணு சம்மதம் மட்டும் தான் பாக்கி " என்றதும் அனைவர் பார்வையும் பல்லவி புறம் விழுந்தது.
முதலில் இருந்தே மித்திரனுக்கும் தனக்கும் திருமணம் செய்து வைக்க இரு குடும்பமும் முடிவு எடுத்ததை பல்லவி தன் மூத்த தமைக்கை மகள் மூலம் அறிந்திருந்தாள். ஆனால் மித்திரன் மனதில் தனக்கு இடம் இருக்கும் என அவள் கற்பனை செய்தது கூட கிடையாது அப்படியிருக்க மித்திரனின் தீடிர் நடவடிக்கையில் அதிர்ந்து நின்றாள். மொத்த குடும்பத்து பார்வையும் தன் மீது நிலைக்க " எதுக்கு இப்ப எல்லாரும் என்னை பாக்குறிங்க அப்பா அம்மாக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான் " என தன் சம்மதம் சொன்ன அடுத்த நொடியே பர்வதன் இரு தட்டுக்கள் உடன் குடும்பத்தின் முன் வந்தவன்.
" இதோ பாருங்க இப்பவே நிச்சியம் பன்னிடுங்க இல்ல இவா கனவுலா கண்டவன் மூக்கு ஞாபகம் வந்திடிச்சு கண்ணு ஞாபகம் வந்திடிச்சுன்னு எதாவாது பன்னி வைச்சாலும் வைச்சுடுவா " என இலவச ஆலோசனை செய்தான். அதில் கடுப்பாகி பல்லவி அவனை முறைக்க " அது உண்மை தான் " என மொத்த குடும்பமும் ஓத்துக் கொண்டு அங்கே இரு குடும்பத்தாலும் தட்டம் மாற்றிக் கொள்ளப்பட்டது. மனதில் பயம் நிறைந்திருந்தாலும் கடவுள் மீது பரத்தை போட்டு விட்டு அவர்கள் நல்வாழ்வுக்காக பிரத்தனை செய்ய ஆரம்பித்தரார் மித்திரானின் தாத்தா.
அறை எங்கும் கும்மிருட்டாய் இருக்க இருவரை கதிரையில் கட்டி வைத்து அவர்களுக்கு மட்டும் வெளிச்சம் படும் படி செய்ய " டேய் இப்ப எதுக்குடா எங்கள இங்க கூட்டி வந்து கட்டிப் போட்டு இருக்கிங்க " என பல்லவியின் தாத்தாவும் மித்திரானின் தாத்தாவும் கோபமாய் கேட்டனர். அவர்கள் முன் வில்லதனமாய் சிரித்த படி " நான் கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சென்ன போதும் அதா விட்டிட்டு என்னை கேள்வி கேக்க கூடாது புரியுதா " என நடிகர் ரகுவரன் குரலில் என மிரட்டியவனை இரு பெரியவரும் முறைக்க ஆரம்பித்தனார். அப்போது தன் அவர்கள் இருந்த அறையை திறந்து கொண்டு உள்ளே வந்தான் மித்திரன். இரு பெரியவரையும் கட்டி அவர்களை மிரட்டிக் கொண்டிருந்தவான் முகம் மறைத்திருந்த தொப்பியை தட்டி விட்டவான். " டேய் அவங்க இரண்டு பேரையும் கூட்டிட்டு தனோ டா வரா சென்னாம் நீ ஏதுக்குடா லூசு மாதிரி கட்டி வைச்சிருக்க " என சஞ்சீவ்வை திட்டினான் மித்திரான்.
அவனை பாவமாய் பார்த்தவான் " மச்சான் இவங்க 60 வயசு தாத்தா இல்லாடா 25 வயது பையனுங்க மாதிரி அடி பிச்சுபுட்டங்க இங்க பாருடா " என அடி வாங்கிய காயத்தை காட்டி பெரியவாரகள் மீது முறைப்படு வைத்தான் சஞ்சீவ். "நீ சஞ்சீவ்வா கூப்பிட்டிருந்த இந்த அடி உனக்கு விழுந்திருக்காது ஆனா நீ திருடன் மாதிரி வேசம் போட்டுட்டு கூப்பிட்டா இவங்க என்ன நானே அடிச்சிருப்பான் டா " என அவனுக்கு பதில் சென்னான் பர்வதன்.
இவர்கள் வாக்குவாதம் இப்படியிருக்க மித்திரன் பெரியவார்களிடம் இறந்த காலத்தில் நடந்த முழு உண்மையை அறிய போரடிக் கொண்டிருந்தனார். ஓருவாறு பல்லவியை தூரத்தும் கணவின் முடிவை அறிந்ததும் நால்வரும் அழுவதா? இல்லை சந்தோசத்தில் சரிப்பதா? என புரியாது நிற்க. இவர்கள் கதைப்பதை மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த விக்ரம் "அப்போவோ நினைச்சான் ஏதோ எனக்கு தெரியாம பன்னுறிங்க என்னு ஆனா இப்பிடி ஓரு பிரச்சனையிலா இருப்பிங்க என்னு நான் நினைக்கலா " என ஆச்சரியமாய் கூறினான். திடிர் என விக்கிரம்மை கண்டதும் மித்திரான் முறைக்க ஆரம்பிக்க. " இப்பிடி பாத்த நான் சொல்ல வந்த விசியத்தை சொல்ல மறந்துடுவான் அண்ணா என்னை பாசமா பாக்குறதா முதல்ல நிறத்துங்க " என தமையனை பார்த்து பதுங்கினான் விக்ரம்.
அவன் பதுங்கிய விதத்தில் சிரிப்பு வார அதை அவன் பார்க்க கூடாது என மறுபுறம் திரும்பி நிற்றான். " இப்ப அண்ணிக்கு இப்பிடி கணவு வராது ஒரு பாக்கம் இருந்தாலும் இறந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் இருக்குறா ஒரு தொடர்பா நீங்க எல்லாரும் மறந்துட்டிங்க! என்னா? அண்ணி கணவுலையும் சரி நிஜத்திலையும் சரி அண்ணா அண்ணிக்கிட்டா தன்னோட மணசா வெளிப்படையா காட்டலா!. இதுவோ கூடா அவங்க மணசா தப்பு தப்பா யோசிக்கா வைக்கும் முதல்லா அண்ணா தன்னோ உணர்வா அண்ணிக்கிட்ட மறைக்கமா காட்டனும் அப்பிடி செஞ்சலோ தன்னோட கணவுக்கும் நிகழ்காலத்துக்கும் சம்மந்தம் இல்ல என்னு அண்ணிக்கு புரிஞ்சிடும் " என அவன் கூறி முடிக்க அங்கு பெரும் அமைதி நிலவியது.
விக்ரம் சற்றும் எதிர் பாரமால் சஞ்சீவ் அவன் தோலில் தட்டி " அறிவாளிடா நீ!.... பல்லவியா இப்பிடி தன் சமாளிக்க முடியும் என்றவன் மித்திரன் பக்கம் திரும்பி மச்சி இப்பவோ போய் பல்லவிக்கிட்ட உன்னோ மணசுலா இருக்குறாதா சொல்லுடா " என்று ஆலேசனை கூறினான் சஞ்சீவ். " மச்சி லவ்வா எனோ தனோ என்னு சொன்னா நல்ல இருக்காதுடா நாளைக்கு இரவு என் பல்லவிக்கிட்டா romance ஆ propose பன்னானுடா" என்றவான்.
முகம் முழும் புன்னகை சிந்த இப்பவோ என் பென்டாட்டிக்கு propos பன்ன என்னா என்ன செய்யனும் என்னு பிளன் பன்னனும் தள்ளுங்கடா அங்கிட்டு என அனைவரையும் களட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் மித்திரன். " இவன் propose பண்ணுவான் ஓகே ஆனா இவன் சொன்ன அந்த romance இவனுக்கு வருமா? " என சஞ்சீவ் மனதில் கேள்வி எழத்தான் செய்தது.
Flashback Start
பாவநந்திரா பயத்தில் காரின் உள் அமர மகேந்திரன் கோபத்துடன் ஏறவும் கார் வேகமாக பட்டினத்தை நோக்கி பறந்தது. பயத்திலும் அதிர்ச்சியிலும் குறுகி போய் அமர்ந்தவளை கண்ணாடி வழியே பார்த்தவன் எதுவும் பேசாது இருந்தான். சரஸ்வதி எதோ தனக்குள் யோசித்த படி தன் சேலையை மடிப்பதை கண்ட வீரா அவளை தனது பக்கம் திருப்பி " என்னாச்சு சரஸ்வதி ஏன் பாவநந்திராவ உன் அண்ணன் கூட அனுப்பி வைச்ச மகேந்திரன் வேர ரொம்ப கோபமா இருக்கிறான் இந்த நேரத்தில .... " என பேச ஆரம்பித்தவனை அவசரமாக உதட்டில் கை வைத்து தடுத்தவள்.
சுற்றி முற்றி பார்த்து விட்டு தங்கள் அறை கதவை அடைத்தவாள். " என்ன மாமா நீங்க! உங்களை விட பாவநந்திரா மேல எனக்கு பாசம் அதிகம் அதே நேரம் பிடிக்காத திருமணத்துக்கு உடன் படுற ஆள் எங்கண்ணன் இல்லை " என்றவளை குழப்பத்தோடு நோக்கிய வீரா " என்ன புள்ள இப்ப நீ சொல்ல வரா .... " என்று இழுக்க.
" அன்னைக்கு காட்டு பக்கம் ஒரு பெண்னை பாத்து பிடிச்சிருக்குன்னு எங்க அண்ண சொன்னதா சென்னிங்களே அது நம்ம பாவநந்திராவ தான் " என்ற சரஸ்வதியின் கூற்றில் ஆச்சரியமாய் மனையாளை பாக்க அவளோ அவனது திறந்த வாயை முடி என்ன என்ற வன்னம் புருவம் உயர்த்தினாள். " அப்ப எதுக்கு கண்ணம்மா உங்கண்ணன் மைனா வகட்டிக்கிறேன்னு சென்னான் " என்று மீண்டும் வீரா குழப்பமடைய.
" அடேய் என் லூசு மாமா உங்களுக்கு இன்னுமா புரியல ஒரு கோடு பெரிய கோடு ஆக்கனும்னா அது பக்கத்தில சின்னா கோடு வரையனும். " என்று தன் கைகாளே காற்றில் கதகளியாடிய மனையவளின் கைகளை பற்றி பிடித்த வீரா. அதை தன் கன்னத்தோடு அழுத்தியபடி " இந்த கோட்டுக்கும் நாம கதைக்கிற கதைக்கும் என்னம்மா சமந்தம் " என வீரா புருவம் சுருக்க. அவனது கனத்து தாடியின் குறுகுறுப்பு அந்த கலோபர தருணங்களிலும் மனதை மயிலிரகாய் வருட.
அதை வெளிக்காட்டாது செல்ல கோபத்துடன் " மங்குனி மாமா இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டே கொள்ளற நீ " என்றவள். " இப்ப அண்ணா பாட்டிக்கிட்ட போய் பாவநந்திராவ கட்டிக்க கேட்ட என்ன நடக்கும் " என கேள்வியாய் தன்னவனை பார்க்க. " ம்.... பாட்டி என் தங்கச்சியா பிரிச்சு மேஞ்சு ராத்திரி சாப்பாட்டுக்கு உப்பு கண்டம் போட்டு அதையும் மொக்கி ஏப்பம் விட்டிருக்கும். " என சற்று பதட்டத்துடனும் கோபத்துடனும் கூறினான் விரா.
" ஆ.... அதனால தன் என் அண்ணன் குறைஞ்சாதி பெண்ண காட்டி கட்டிக்கிறேன்னு சென்னதும் அதுல பீபி சுகர் ஏரி போன பாட்டியும் அண்ணணுக்கு பாவநந்திராவா கட்டி வைச்சாங்க. இப்ப புரியுதா!? " என கேட்ட படி அவனது கன்னத்தில் படிந்திருந்த தன் கைகளை கொண்டு அவனது கன்னத்தை செல்லாமாய் ஒரு கிள்ளி எடுத்து உதட்டோடு ஒத்தி எடுத்தாள் சரஸ்வதி.
அவளின் செயலில் சிறு கிராக்கத்துடன் " நீ சொல்லதெல்லாம் புரியிது தான் கண்ணம்மா ஆனா உன் அண்ணன் எப்படி பாட்டி நிச்சியமா பாவநந்திராவா தான் கட்டி வைப்பாங்கன்னு நம்பினான் " என அடுத்த கேள்வியை எழுப்ப. " அய்யோ மாமா முதல்ல சந்தேகமேல சந்தேகம் கேக்குற உன் வாயை கட்டனும் " என்றவளை அதுக்கென்ன என்று கனநேரத்தில் அவளது முகம் நோக்கி முன்னேறியவனது வாயில் அவசரமாக ஒரு அடி வைத்து அமரவிட்டவள்.
" ஒரு வேல என் அண்ணனாகிட்ட பாட்டி வேற யாரையும் கட்டிக்க சொல்லி அது தப்பா போனா கோபத்தில நிச்சியமா அந்த பெண்ணை கஷ்டபடுத்திடுவான் என்னு பாட்டிக்கு தெரியும் அதுனால தான் மத்த முறைப் பொண்ணுங்களை கட்டி வைக்காம விட்டில இருந்து ஒதுக்கி வைச்சிருக்கிற பாவநந்திராவா கட்டி வைச்சாங்க இத எங்கண்ணா நல்லாவே யூகிச்சிருக்கான் அது தன் அண்ணா நடிச்சு தள்ளிட்டான். " என சரஸ்வதி கூற வீராவின் மனதில் இருந்த சந்தேகங்கள் பறந்து போனது. அதற்கு பரிசாய் அவள் அசந்த நேரத்தில் அவளது உதட்டில் அழுத்தமாய் ஒரு முத்தத்தை பதித்தவன். " எந்த காலத்துலயும் அடியேன் என் மனையாள் சொல்லை தட்டேன் " என்று கனநேரத்தில் அங்கிருந்து இடத்தை காலி செய்திருந்தான்.
மறுபுறம் அடந்த மரங்களின் நடுவில் கருங்கல்லில் கட்டிய பெரிய வீட்டிற்க்கு முன் மகேந்திரன் காரை நிறுத்த சொல்லி இறங்கியவன் பாவநந்திராவை கண்டு கொள்ளாது உள்ளே சென்று விட காரின் உள்ளேயே முழித்துக் கொண்டிருந்தவள் மெல்ல காரை விட்டு இறங்கினாள். அந்த மலை பிதேசத்தின் ஜில் என்ற காற்றின் குளிரால் தன் சேலை தலைப் எடுத்து தனக்கு பேர்த்திக் கொண்ட வன்னம் வாசலை பார்த்து நிற்க்க. அதை கண்டு வேகமாகய் வெளியே வந்த மகேந்திரன் " என்னாம்மா உள்ள வானு சொன்னாதான் வருவீங்களோ " என்றவன். " உள்ள வரும் போது உன் பெட்டி படுக்கைய எடுத்துட்டு வா " என எந்த உணர்சியையும் வெளிகாட்டாது கடுகடுத்து சென்றவனையே விழி கலங்க பார்த்தவள் எதுவும் பேசாது உள்ளே சென்றாள்.
அவன் அன்பான வார்த்தைகளை மட்டுமே கேட்டவளுக்கு அவனின் இந்த மாற்றம் வலியை எற்படுத்தியது. மகேந்திரன் தாய் தந்தைக்கும் இந்த திடிர் திருமணத்தில் விருப்பம் இல்லதா போதும் இதுவே சரியென பட்டது. பாவநந்திரா அந்த வீட்டிற்கு வந்து ஆறு மாதங்கள் கடந்திருந்த போதும் மகேந்திரன் அவளிடம் அன்பாய் பேசியது கிடையாது ஆனால் சிறிதாய் ஒரு மாற்றம் அவன் எரிச்சல் பட்டு கதைப்பதை நிறுத்தி மற்றவருடன் கதைப்பதை போல் கதைக்க ஆரம்பித்திருந்தான்.
Flashback End
தொடரும்...