webnovel

அத்தியாயம் 2

இனியன் ராஜன் வீட்டில் மூன்று ஆண்டுகளாக வாழ்ந்து வந்தான், அவர்கள் மூவரும் சந்தோஷமாக வசித்து வந்தனர். ஒரு நாள் மூவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்கள் அப்போது திடீரென ஒரு சத்தம் கேட்டது. ராஜன் வெளியே வந்து பார்த்தான் அப்போது அங்கு யாரும் இல்லை வீட்டிற்குள் வந்து பார்த்தான் அப்போது ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவன் மின்விளக்கை ஏற்றினான் அப்போது ஒருவன் நின்று கொண்டிருந்தான் யார் நீ ? என்று ராஜன் கேட்டார் திடீரென பின்புறம் ஒருவன் ராஜனை தலையில் அடித்தான். ராஜனின் மனைவி சத்தம் கேட்டு கீழே வந்து பார்த்தால் அப்போது ராஜன் வலியில் துடித்தான் அவளையும் அந்த நபர்கள் தலையில் அடித்தார்கள். அப்போது ராஜன் அவர்களின் உரையாடலை கேட்டான் சிறிது நேரம் கழித்துதான் ராஜனிற்கு தெரிந்தது அவர்கள் தீவிரவாதிகள் என்று. அச்சமயம் இனியனும் கீழே இறங்கி வந்தான் தீவிரவாதிகள் அவனை பிடித்துக் கொண்டார்கள், ராஜன் பயத்தில் உறைந்து போனார். அப்போது தீவிரவாதிகள் இனியனை கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள் ராஜன் தடுத்தான். அவர்கள் சில இந்திய நாட்டின் ரகசியங்களை தருமாரு ராஜனிடம் கேட்டனர். ராஜன் தரமுடியாது என்று கூறினார். திடீரென ஒருவன் ராஜனின் மனைவியை துப்பாக்கியால் சுட்டான். ராஜன் கத்தினார் கதரி அழுதார் தீவிரவாதிகள் இனியனையும் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள் அப்போதும் ராஜன் தர மறுத்தார். அவர்கள் இனியனை கொல்ல திட்டமிட்டனர். ராஜன் திடீரென அவர்களைத் தள்ளி விட்டு தப்பிக்க பார்த்தான் இனியன் அவர்களிடமிருந்து தப்பித்து விட்டான் ஆனால் ராஜன் மாட்டிக்கொண்டார். ராஜன் இனியனை ஓட சொன்னார் ஆனால் தீவிரவாதிகள் ராஜனை கொன்று விடுவோம் என்று இனியனை மிரட்டினார்கள். இனியன் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி விட்டான் அப்போது தீவிரவாதிகள் ராஜனை சுட்டுக் கொன்றார்கள். இனியன் அங்கு நின்றுகொண்டிருந்த லாரியில் ஏறி படுத்துக் கொண்டான். சில வாரங்களுக்கு பிறகு இந்திய இராணுவம் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியானது.

இருவது வருடங்களுக்கு பிறகு.....

Siguiente capítulo