webnovel

களம் 2

இனியன் நிம்மதியாக பூங்காவைப் பார்த்து கொண்டு இருந்தான், அப்போது ஒருவன் தலையில் தொப்பி அனிந்தபடி பூங்காவிற்கு அருகில் நடந்து வந்தான். இனியன் அவனை பார்த்துக் கொண்டு இருந்தான் அவன் கையில் ஒரு பெட்டி இருந்தது, அந்த பெட்டியை பூங்காவிற்குள் தூக்கி எறிந்தான். ஆனால் இனியனால் அவன் முகத்தை சரியாக பார்க்கமுடிவில்லை. தொப்பி அனிந்தவன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான், சிறிது நேரத்தில் அங்கு பயங்கரமான ஒரு வெடிகுண்டு வெடித்தது. பல பேர் அலரி அடித்து ஓடினார்கள், சில குழந்தைகளும் பெற்றோர்களும் சிதறிய படி இறந்துகிடந்தனர், கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் முடிந்தன. காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர், வெடிகுண்டு வைத்தவன் யார் என்று காவல்துறைக்கு தெரியவில்லை, எந்த ஆதாரமும் இல்லை. அங்கு ஒரு 'சிசி டிவி' இருந்ததை காவல்துறை கண்டுபிடிதனர், அதன்பின் சிசிடிவியை ஆராய்ந்தனர் அக்காட்சிகளிளும் அவன் முகம் சரியாக தெரியவில்லை. காவல்துறை மேல் அதிகாரியாக விஜய் என்பவர் பொறுப்பேற்றார், அந்நேரத்தில் இனியன் விஜய்யின் அலுவலகத்திற்கு சென்றான். நான் அந்த நபரைப் பார்த்தேன் ஆனால் அவன் முகம் எனக்கு சரியாக தெரியவில்லை என்று விஜய்யிடம் கூறினான். விஜய் இனியனை விசாரித்து விட்டு சிசிடிவி காட்சிகளை காண்பித்தார் அப்போது இனியன் அக்காட்சியை நன்கு கவனித்தான் அப்போது ஒரு கல்லூரி பெண் தன் தோழியை புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தாள் அதுவும் தோழியின் பின்புறமே நின்றுகொண்டிருந்தான். அதை இனியன் கவனித்தான் அதை உடனே விஜய்யிடம் கூறினான். அந்த பெண் வேறுயாரும் இல்லை விஜய்யின் மகள் தான் உடனே விஜய் தன் வீட்டிற்கு சென்று தன் மகளின் செல்போனைக் கேட்டார். அப்போது அவர் அந்த புகைப்படங்களை தேடினார் அதில் நினைத்தபடியே அவன் முகம் தெளிவாக தெரிந்தது, விஜய் உடனே தன் அலுவலகத்திற்கு வந்தான்.

விஜய் அவன் முகத்தை இனியனிடம் காண்பித்தார், உடனே விஜய் அவன் முகத்தை கணினியைப் பயன்படுத்தி ஆதார் அட்டையில் இருக்கும் தகவல்களை அவன் முகத்துடன் ஒப்பிட்டு பார்த்தார் அப்போது அவனைப் பற்றி சில தகவல்கள் தெரியவந்தது. அவன் பெயர் சக்தி என்றும் அவன் முகவரியும் மற்றும் சில தகவல்களும் காவல்துறைக்கு தெரியவந்தது, இனியன், விஜய் மற்றும் சில காவல்துறை அதிகாரிகளும் சக்தி இருக்கும் இடத்திற்கு சென்றனர் அப்போது சக்தி காவல்துறை வந்திருப்பதை அறிந்து கொண்டான், அவனின் வீடு பூட்டியபடி இருந்தது. விஜய் பூட்டை உடைத்து விட்டு உள்ளே சென்றார், விஜய் உள்ளே வந்தவுடன் சக்தி தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

Nächstes Kapitel