webnovel

FILING LIFE

(மனதை நெகிழவைத்த உண்மைச் சம்பவம்)

இரவு 9 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், இரண்டு குழந்தைகளுடன் எனது வீட்டிற்கு முன்னால் வந்து நிற்கின்றாள்.

இதுவரை காணாத ஒரு பெண். பாதை தவறிழைத்ததோ என்று எனது உள்ளம் சொல்லுகின்றது.

வழமையான யாசகர்களின் பட்டியலிலும் அவளுடைய முகம் தோன்றவில்லை.

நேராக நின்று அவளால் கதைக்கவும் முடியவில்லை. தனது முந்தானையால் முகத்தை மறைத்துக் கொண்டு நிலைகுலைந்து தடுமாறுகிறாள்.

அந்தப் பெண்ணின் நிலையை அவதானித்து பின்வாங்கியவனாக எனது மனைவியை முன்னால் அனுப்பினேன்.

என்னம்மா! எங்கிருந்து வாரீங்க! என்று எனது மனைவி கேட்க

இல்லம்மா! இல்லம்மா! என்று மலை போன்று அவளது மனதில் ஆட்கொண்டிருந்த வெட்கத்தை உடைத்தவளாக ஏதோ வாயால் சொல்ல எத்தனிக்கின்றாள்.

ஆனால் வார்த்தைகள் வரவில்லை. கண்களால் கண்ணீர்தான் வழிந்தோடுகின்றது.

இரு குழந்தைகளும் கண்ணீர் விடும் தனது தாயை பார்க்கின்றனர்.

அழ வேண்டாம்! சொல்லுங்க எனச் சொல்ல

அவள் " உம்மா இன்னும் ஒரவர் தான் இருக்கு, லொக்டவ்ன் பன்ன"

"நான் பக்கத்து ஊரிலிருந்து தான் வாரன். நான் இன்டேகி ஆஷூரா நோம்ப தண்ணீரும் ஈச்சம் பழத்தோடதான் தொறந்தன்."

"நான் எப்படியும் பசியில் இருப்பன். இந்த பச்சிளம் பாலகன்களுக்கு என்னதான் சொல்ல."

"ஏன்ட மாப்பிளயும் மௌத்து 06 மாசம் ஆகுது."

என்று கூறி அந்தப் பெண் கண்கலங்கினாள்.

எனது வீட்டில் இருந்த உணவுப் பொருட்களையும் சில பணங்களையும் கொடுத்தேன்.

அப்போது அந்தத் தாயும் அவ்விரு பச்சிளம் குழந்தைகளும் ஆனந்தக் கண்ணீருடன் சொன்ன ஜஸாகல்லாஹ்வும் குழந்தைகளின் புன்னகையும் எனது கல்பை விட்டு இன்னும் பிரியவில்லை.........எனவே இவ்வாறு கஷ்டத்தில் வாடுபவர்களின் கண்ணீரைத் துடைப்போம்.