webnovel

ஆரம்ப ஆட்டம்

முத்துராமன் வாழ்க்கையில் பல அமானுஷ்ய நிகழ்வுகளை கண்டார். இது கற்பனையா இல்லை உண்மையா என்று இவருக்கு தெரியவில்லை. ஒரு நாள் இவர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இருந்த போது ஒரு துண்டு காகிதம் ஜன்னல் மூலம் வந்தது அதை எடுத்து பார்த்த போது அவருக்கு கண்கள் மங்கலாக தெரிந்தது அதனால் கண்ணாடியை எடுக்க தன் பெட்டியை திறந்தார் அப்போது அங்கு ஒரு காகிதம் இருந்தது , இரண்டையும் சேர்த்து பார்த்த போது திடீரென வந்த ஒரு மரத்தின் வேர் அவரின் கழுத்தை நெறித்து கொன்றது ஆனால் அங்கு யாருமே இல்லை. இந்த கொலையை அமானுஷ்ய நிகழ்வாக நடந்திருக்கும் என்று நம்ப பட்டது, காவல்துறை இந்த வழக்கை விசாரிக்க தொடங்கியது. காவல் துறை பார்த்த போது அங்கு ஒரு தடையமும் இல்லை , முத்துராமன் கையில் வைத்திருந்த காகிதமும் அங்கு இல்லை இவரின் உடல் மட்டும் அங்கு இருந்தது காவல்துறை அங்கு வேலை செய்யும் ஆட்களிடம் விசாரணை நடத்தியது ஆனால் அவர்களுக்கு ஒன்று தெரியவில்லை. ஒரு நபர் மட்டும் நான்தான் அந்த உடலை முதலில் பார்த்தேன் என்றும் முத்துராமன் ஒரு காகிதத்தை கையில் வைத்திருந்தார் என்று கூறினார். அதன்பிறகு அங்கு தடையங்களும் இல்லை அதனால் காவல்துறை இவ்வழக்கை முடிக்க திணறியது, உடற்கூராய்வில் இந்த வித முன்னேற்றமும் இல்லாததால் உடலை புதைத்தனர். சில நாட்கள் கழித்து இந்த வழக்கு வேறொரு அதிகாரியிடம் சென்றது. அவர் பெயர் சக்கரவர்த்தி, இவர் இந்த கொலை தானாக நடக்க வில்லை என்றும் கண்டிப்பாக சிலருக்கு சம்பந்தம் இருக்கும் என்று நினைத்தார் அதனால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கினார். அதற்கு முதலில் தேவை பட கூடியது முத்துராமனின் உடல், அதை எடுத்து பார்த்தால் ஏதேனும் தெரிய வாய்ப்பு இருக்கும் என்பதால் அவர் முதலில் அந்த உடலை எடுக்க மயானத்திற்கு சென்றார். அங்கு அனைத்து அதிகாரங்களும் வந்தனர், குழியைத் தோண்ட தொடங்கினர் அப்போது துர்நாற்றம் வீச தொடங்கியது வேகமாக தோண்ட தொடங்கினர் ஆனால் முத்துராமனின் உடல் அங்கு இல்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் காவல்துறை அதிகாரிகள். உடனே அந்த இடத்தில் முழுவதும் தேடினர் ஆனால் உடல் கிடைக்கவில்லை.

முத்துராமன் உடலை தேட தொடங்கினர்.....

Next chapter